கொவிட் தொற்று காரணமாக பதுளை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ள பாடசாலைகளில் பெருந்தோட்ட பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்பு செயலாளரும் இ.தொ.காவின் உபத் தலைவருமான செந்தில் தொண்டமானின் ஏற்பாட்டில் 'E Learning'(தொலைக்கல்வி) நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

பதுளை மாவட்டத்தில் பெருந்தோட்ட பகுதிகளில் 15 'E Learning (தொலைக்கல்வி) நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் அதில் இரண்டு முஸ்லிம் பாடசாலைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன. அத்துடன், மொனராகலை மாவட்டத்தில் பெருந்தோட்ட பகுதியில் ஒரு 'E Learning' (தொலைக்கல்வி) நிலையமும் உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும், 'E Learning' (தொலைக்கல்வி) நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளமையால் கல்வி செயற்பாடுகளை மேற்க்கொள்வதற்கு இலகுவாக  உள்ளதாக பெற்றோர் மற்றும்  மாணவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

 'E Learning' (தொலைக்கல்வி) நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ள பாடசாலைகள் வருமாறு