(நா.தனுஜா)
இலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்து வருவதன் காரணமாக இலங்கைக்கான பயணங்களை மேற்கொள்வது தொடர்பில் அமெரிக்கப் பிரஜைகள் மீளாய்வு செய்வது சிறந்ததாகும் என்று அமெரிக்க இராஜாங்கத்திணைக்களம் தமது பிரஜைகளுக்கு அறிவுறுத்தியிருக்கிறது.
அமெரிக்கப் பிரஜைகள் இலங்கைக்குப் பயணம்செய்வது குறித்த அறிவிப்பொன்று கடந்த மே மாதம் 24 ஆம் திகதி அமெரிக்க இராஜாங்கத்திணைக்களத்தினால் வெளியிடப்பட்டிருந்தது.
அந்த அறிவிப்பில் 'இலங்கைக்கு விஜயம் செய்வது குறித்து மீள்பரிசீலனை செய்யப்பட வேண்டும்' என்பதைக் குறிக்கும் 3 ஆம் மட்ட எச்சரிக்கையானது, 'இலங்கைக்கு விஜயம்செய்ய வேண்டாம்' என்பதைக் குறிக்கும் 4 ஆம் மட்ட எச்சரிக்கையாக மாற்றப்பட்டிருந்தது. எனினும் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளவிருக்கும் அமெரிக்கப் பிரஜைகளுக்கு விடுக்கப்பட்ட 4 ஆம் மட்ட எச்சரிக்கை தற்போது மீண்டும் 3 ஆம் மட்ட எச்சரிக்கையாக மாற்றப்பட்டிருக்கிறது.
அதன்படி அமெரிக்க இராஜாங்கத்திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையப்பக்கத்தில் நேற்று பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள பயண அறிவுறுத்தலில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்திருப்பதன் காரணமாக இலங்கைக்குப் பயணம் மேற்கொள்வது தொடர்பில் மறுபரிசீலனை செய்யவேண்டும். அதேவேளை இலங்கையில் தீவிரவாத நடவடிக்கைகளால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களும் அதிகரித்துள்ளன.
இலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் மிகவும் உயர்வடைந்திருப்பதைக் காண்பிக்கும் வகையில் அமெரிக்காவின் தொற்றுநோய்ப்பரவல் கட்டுப்பாடு மற்றும் ஒழிப்பு நிலையமானது, இலங்கை தொடர்பில் 3 ஆம் மட்ட சுகாதார எச்சரிக்கை அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் அமெரிக்கப்பிரஜைகள் முழுமையாகத் தடுப்பூசியைப் பெற்றிருப்பின் அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதற்கும் தீவிரமான அறிகுறிகள் தென்படுவதற்குமான வாய்ப்பு மிகவும் குறைவாகும். இருப்பினும் இலங்கைக்கான விஜயம் தொடர்பில் மீளாய்வு செய்வதும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அங்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் பற்றி அறிந்துகொள்வதற்கு அமெரிக்கத்தூதரகத்தின் கொவிட் - 19 குறித்த இணையப்பக்கத்தைப் பார்வையிடுவதும் வரவேற்கத்தக்கதாகும் என்று அப்பதிவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அதேவேளை ஏற்கனவே அமெரிக்க இராஜாங்கத்திணைக்களத்தினால் விடுக்கப்பட்டிருந்த தீவிரவாதத்தாக்குதல் அச்சுறுத்தல் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு, நேற்று வெளியிடப்பட்டுள்ள அறிவித்தலுடன் இணைக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் பின்தங்கிய பகுதிகளில் உள்ள அமெரிக்கப்பிரஜைகளுக்கு ஏதேனும் அவசர உதவிகள் தேவைப்படும் பட்சத்தில் அதனை வழங்குவதற்கு வரையறுக்கப்பட்ட வளங்களையும் வசதிகளையுமே அமெரிக்க அரசாங்கம் கொண்டிருக்கின்றது என்றும் அவ்வறிவித்தலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM