பலூசிஸ்தான் மக்களுக்கு நீதி கோரி ஜெனிவாவில் புகைப்பட கண்காட்சி

Published By: J.G.Stephan

07 Jul, 2021 | 12:07 PM
image

ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகளின் அலுவலகம் முன் மூன்று நாள் நீடித்த புகைப்படம் மற்றும் சுவரொட்டி கண்காட்சியில் பாகிஸ்தானின் மனித உரிமை மீறல்கள் வெளிப்படுத்தப்பட்டன.  ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 47 வது கூட்டத்தொடர்  தற்போது இடம்பெறுகின்ற நிலையில், 'பலோச் குரல்' சங்கத்தால் இந்த கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

புகைப்படக் கண்காட்சி மற்றும் ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகளின் அலுவலகத்தின் முன் இவ்வாறு பதாகைகளை வைப்பதன் நோக்கம் பலூசிஸ்தானில் பாக்கிஸ்தான் படைகள் முன்னெடுக்கும் மனித உரிமை மீறல்களை நிறுத்த வேண்டும் என்பதாகும் என குறித்த  சங்கத்தின் தலைவர் முனீர் மெங்கல் தெரிவித்தார்.


சிவில் சமூக பிரதிநிதிகளிடமிருந்தும், காணாமல் போனவர்களுக்கான குரல் போன்ற அமைப்புகளிடமிருந்தும், குடும்ப உறுப்பினர்களிடமிருந்தும் பலூசிஸ்தான் பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட  மக்கள் கட்டாயமாக காணாமல் போன சம்பவங்கள் பாகிஸ்தான் படைகள் முன்னெடுக்கப்படுவதை அறிவதாகவும் அவர் குறிப்பிட்டார். பலூசிஸ்தானில், பழங்குடி மக்கள் மிக மோசமான மனித உரிமை நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர். அங்கு கொலைகள் மற்றும் கடத்தல்கள் பொதுவானவை மட்டுமல்ல, பொருளாதார சுரண்டல் கடந்த பல ஆண்டுகளாக பரவலாக உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

காணாமல்போன பலரின் குடும்ப உறுப்பினர்கள்  குவெட்டா, கராச்சி மற்றும் இஸ்லாமாபாத்தில் உள்ள பத்திரிகை மையங்களுக்கு வெளியே நீதி கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலைமை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்பதே எமது இந்த போராட்டத்தின் நோக்கமாகும் என குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வடக்கு மசெடோனியாவில் இரவு விடுதியில் தீ...

2025-03-16 14:34:32
news-image

பலநாடுகளிற்கு எதிராக போக்குவரத்து தடை -...

2025-03-16 12:43:01
news-image

“உங்கள் இந்தி மொழியை எங்கள் மீது...

2025-03-16 11:53:38
news-image

பத்திரிகையாளர்கள் நிவாரண பணியாளர்கள் மீது இஸ்ரேல்...

2025-03-16 10:47:17
news-image

ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் நிலைகள் மீது அமெரிக்கா...

2025-03-16 07:38:57
news-image

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன்னிலையில் வீடியோ...

2025-03-15 12:07:55
news-image

பங்களாதேஷில் 8 வயது சிறுமி பாலியல்...

2025-03-14 15:44:10
news-image

பனாமா கால்வாயை முழுமையான கட்டுப்பாட்டின் கீழ்...

2025-03-14 14:33:13
news-image

பாலஸ்தீன மக்கள் மீது ஆதிக்கம் செலுத்தி...

2025-03-14 13:56:27
news-image

போர் நிறுத்தத்துக்கு ஒப்புக் கொள்கிறோம் ஆனால்.....

2025-03-14 13:24:45
news-image

புகையிரதத்தின் மீது பிரிவினைவாதிகளின் தாக்குதலிற்கு இந்தியா...

2025-03-14 12:53:23
news-image

டென்வர் விமானநிலையத்தில் அமெரிக்க எயர்லைன்ஸ் விமானத்தில்...

2025-03-14 10:20:32