அவுஸ்திரேலியாவின் மிகப்பெரிய நகரமான சிட்னிக்கான முடக்கல் நிலை மேலும் ஒரு வாரம் நீடிக்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 தொற்று நோயின் மிகவும் ஆபத்தான டெல்டா மாறுபாடு அச்சம் காரணமாக இந்த உத்தரவினை பிறப்பித்ததாக நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் தலைவர் புதன்கிழமை அறிவித்தார்.

புதிய உத்தரவுகளின்படி ஜூலை 16 வரை 5 மில்லியனுக்கும் அதிகமான சிட்னி குடியிருப்பாளர்கள் முடக்கல் நிலையினை எதிர்கொள்வார்கள்.

ஜூலை 7 இன்றைய தினம் மேலும் 27 புதிய கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், சிட்னி கொவிட்-19 கொத்தணியில் இதுவரை 357 பேர் பாதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.