அகில இலங்கை மெய்வலுனர் போட்டிகள் நாளை (03) ஆரம்பமாகவுள்ளதாக கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

நாளை ஆரம்பமாகவுள்ள மெய்வலுனர் போட்டிகளில் 27 வகையான போட்டிகள் இடம்பெறவுள்ளது. 

இந்த மெய்வலுனர்  போட்டிகளில் 9 மாவட்டங்களில் உள்ள  521 பாடசாலைகளை சேர்ந்த 18,089 மாணவர்கள் பங்குகொள்ளவுள்ளதாக கல்வியமைச்சர் சுட்டிக்காட்டினார்