இலங்கை கிரிக்கெட்டின் முக்கிய வருடாந்திர ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்ட 24 வீரர்களும் இன்று (07) காலை 8 மணிக்கு முன்னர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக இலங்கை கிரிக்கெட் செயலாளர் மொஹான் டி சில்வா தெரிவித்துள்ளார்.

இதனால் இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களுக்கும் இலங்கை கிரிக்கெட்டுக்கும் இடையிலான வீரர்கள் ஒப்பந்தம் தொடர்பில் காணப்பட்ட கருத்து வேறுபாடு நிறைவடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் செய்த பல தேசிய கிரிக்கெட் வீரர்கள் (10-12 வீரர்கள்) எதிர்வரும் இந்தியா தொடருக்கான சுற்றுப்பயண ஒப்பந்தங்களில் நேற்று கையெழுத்திட்டுள்ளனர். 

ஏனைய வீரர்களுக்கு இன்று காலைக்குள் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு வலியுறுத்தப்பட்டது.