பிரபல பொலிவூட் நடிகர் திலீப் குமார் காலமானார்

By Vishnu

07 Jul, 2021 | 09:44 AM
image

பிரபல பொலிவூட் நடிகர் திலீப் குமார், நீண்ட மற்றும் நீடித்த நோயால் அவதிப்பட்டு வந்த நிலையில் புதன்கிழமை காலை மும்பையில் காலமானார்.

உயிரிழக்கும் போது அவருக்கு வயது 98.

மும்பையின் கார் இந்துஜா மருத்துவமனையில் காலை 7.30 மணிக்கு திலீப் குமார் இறுதி மூச்சு விட்டார் என அரவது மனைவியும் சிரேஷ்ட நடிகையுமான சாய்ரா பானு உறுதிபடுத்தியுள்ளார்.

திலீப் குமார் ஜூன் மாதம் இரண்டு முறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

ஜூன் 6 ஆம் திகதி அவர் சுவாச பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதன்போது அவரின் நுரையீரலுக்கு வெளியே உள்ள பிளேராவின் அடுக்குகளுக்கு இடையில் அதிகப்படியான திரவத்தை உருவாக்கியுள்ளது கண்டறியப்பட்டது.

சரியான சிகிச்சை பெற்ற பின்னர், திலீப் குமார் ஜூன் 11 அன்று மருத்துவமனையிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

அதன் பின்னர் திலீப் குமார் மூச்சுத்திணறல் புகார் காரணமாக கடந்த வாரம் மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

புகழ்பெற்ற நடிகர் 1950 கள் மற்றும் 1960 களில் பல உன்னதமான இந்தி மொழி திரபை் படங்களில் முக்கிய வேடங்களில் நடித்தார். 

இந்த படங்களில் சில முகலாய-இ-ஆசாம், தேவதாஸ், நயா தாகூர், கங்கா ஜும்னா, ராம் அவுர் ஷியாம் மற்றும் பிற படங்களும் அடங்கும்.

திலீப் குமாருக்கு 2015 இல் பத்ம விபூஷன், 1991 இல் பத்ம பூஷண் மற்றும் 1994 இல் தாதாசாகேப் பால்கே ஆகிய விருதுகள் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right