( எம்.எப்.எம்.பஸீர்)

பொதுமக்கள் அதிகளவில் ஒன்றுகூடும் ஆர்ப்பாட்டங்கள், பொதுக்கூட்டங்கள், பேரனிகள் காரணமாக  கொரோனா தொற்று பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விடுத்துள்ள நிலையில்,  அவை தொடர்பில் தனிமைப்படுத்தல் ஒழுங்குவிதிகளின் பிரகாரம்  பொலிசார் செயற்படுவர் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

பொலிஸ் தலைமையகம் மீண்டும் விடுத்துள்ள எச்சரிக்கை ! | Virakesari.lk

சுகாதார ரீதியிலான ஆபத்தை தோற்றுவிக்கும் ஆர்ப்பாட்டங்கள் எனும் தலைப்பில் இந்த அறிக்கை  பொலிஸ் ஊடகப் பிரிவிவால் வெளியிடப்பட்டுள்ளது.

பொதுமக்கள் அதிகளவில் ஒன்றுகூடும் ஆர்ப்பாட்டங்கள், பொதுக்கூட்டங்கள் காரணமாக  கொரோனா தொற்று பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனால் மறு அறிவித்தல் வரை ஆர்ப்பாட்டங்களோ பொதுக்கூட்டங்களோ நடத்தப்படக் கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் பொலிஸ்மா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள  DDG (PAS)1/DO2/7/13/2017/20 கடிதத்திற்கு அமைவாக பொலிஸ் ஊடகப் பிரிவு இந்த அறிக்கையை விடுத்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.