ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தை ஊடுருவிய குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இருவரையும் பிணையில் விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த உத்தரவினை கொழும்பு பிரதம நீதவான் கிஹான் பிலபிட்டிய பிறப்பித்துள்ளார்.

இதனடிப்படையில் 17 வயது பாடசாலை மாணவனை 10 இலட்சம் பெறுமதியான சரீரப்பிணையில் விடுவித்த நீதவான், 27 வயது இளைஞனை 25 ஆயிரம் ரூபா ரொக்கப்பிணையிலும், 10 இலட்சம் பெறுமதியான நான்கு சரீரப்பிணையிலும் விடுதலை   செய்யுமாறு உத்தரவிட்டார்.