யாழ். அரியாலையில் மணல் கொள்ளையர்களின் தாக்குதலில் நான்கு விசேட அதிரடி படையினர் காயம்

Published By: Digital Desk 3

06 Jul, 2021 | 11:42 AM
image

யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் மணல் கொள்ளையர்களுக்கு பொலிஸ் விசேட அதிரடி படையினருக்கும் இடையில் ஏற்பட்ட கைக்கலப்பில் நான்கு பொலிஸ் விசேட அதிரடி படையினர் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

அதேவேளை மணல் கொள்ளையர்கள் இருவர் கைது செய்யப்பட்டு, யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.  

அரியாலை கிழக்கு பகுதியில் இன்றுசெவ்வாய்க்கிழமை அதிகாலை 02.00 மணியளவில் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 

குறித்த பகுதியில் மணல் கொள்ளையில் கும்பல் ஒன்று ஈடுபட்டுள்ளதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் அப்பகுதிக்கு பொலிஸ் விசேட அதிரடி படையினர் விரைந்திருந்தனர். 

அங்கு மணல் கொள்ளையில் ஈடுபட்ட கும்பலை பொலிஸ் விசேட அதிரடி படையினர் கைது செய்ய முற்பட்ட போது , கொள்ளையர்கள் அவர்கள் மீது மணல் அள்ளுவதற்கு வைத்திருந்த உபகாரணங்களால் தாக்குதல் நடாத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். 

குறித்த தாக்குதல் சம்பவத்தில் அதிரடி படையினர் நான்கு பேர் காயமடைந்துள்ளனர். அதேவேளை தப்பி சென்றவர்களில் இருவரை துரத்தி மடக்கி பிடித்து அதிரடி படையினர் கைது செய்திருந்தனர். 

காயமடைந்த அதிரடி படையினர் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

அதேவேளை கைது செய்யப்பட்ட இருவரையும், மணல் கொள்ளை நடைபெற்ற இடத்தில் மீட்கப்பட்ட உழவு இயந்திரம் ஒன்றையும் பொலிஸ் விசேட அதிரடி படையினர் யாழ்ப்பாண பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். 

கைது செய்யப்பட்ட நபர்களிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், தப்பி சென்ற ஏனையவர்களை கைது செய்யவதற்கான நடவடிக்கைகளையும்  மேற்கொண்டுள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 11:50:02
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18