கொரோனா நோய் காரணமாக எமது வீதியோரப் போராட்டம் மௌனிக்கப்பட்டுள்ளதே தவிர விசமிகளுக்கு அஞ்சி அல்ல. நிலத்தை மீட்கும் வரை எமது போராட்டம் தொடரும் என பொத்துவில் 60 கட்டை ஊரணி மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அம்பாறை, பொத்துவில் 60 கட்டை ஊரணி கிராம மக்கள் தமது பூர்வீக வாழ்விடங்கள் மற்றும் விவசாய காணிகளை வழங்குமாறு கோரி கடந்த 2018 ஆகஸ்ட் 14 ஆம் திகதி முதல் பொத்துவில் ஊரணி பிரதான வீதியில் புஞ்சுமாத்தயா ரங்கத்தனாவின் தலைமையில் இவ்போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர்.
இவ் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்த அம்பாறை மாவட்ட செயலகம் மற்றும் பொத்துவில் பிரதேச செயலகம் ஒன்றிணைந்து மாவட்ட செயலாளர் மேலதிக மாவட்ட செயலாளர் பிரதேச செயலாளர்கள் மற்றும் அரசியல்வாதிகள் என பலரும் மக்களுக்கான காணிகளை வழங்கி வைக்கும் நோக்குடன் சட்டரீதியான நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.
பொத்துவில் பிரதேச செயலாளர் மற்றும் பிரதேச செயலக காணிப்பிரிவு உத்தியோகத்தர்கள் இணைந்து காணி கோரிக்கையாளர்களின் காணி ஆவனங்களை பரிசீக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு பொத்துவில் பிரதேச செயலகத்தினால் பெயர் பட்டடில் ஒன்றும் வெளியீடப்பட்டு இருந்ததோடு காணிகளை எல்லைப்படுத்தும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு இருந்தன.
இந்நிலையில் நாட்டில் ஏற்பட்ட கொரோனா நோய் தாக்கம் காரணமாக காணிகள் கையளிப்பு தொடர்பான வேலைகள் தாமதங்கள் ஏற்பட்டு இருந்ததுடன் நிலமீட்பு போராட்டகாரர்களின் வீதியோர போராட்டமும் தற்காலிகமாக கைவிடப்பட்டு இருப்பதுடன் சில விசமிகளால் போட்ட கொட்டகையும் சேதப்படுத்தப்பட்டு இருப்பதாக தெரிவித்து இருந்தனர்.
இவ்வாறு நிலமீட்பு போராட்டத்தின் நிலைமைகள் காணப்பட்ட போதிலும் தற்போது 102 குடும்பங்களின் பெயர் பட்டியல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளதாகவும் ஏனைய குடும்பங்களின் பெயர்கள் இடம்பெறாமைக்கு காரணங்கள் புரியாது கவலை அடைந்துள்ளதாகவும் ஆழந்த கவலையுடன் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM