(எம்.எப்.எம்பஸீர்)
சிறுமிகள், பெண்களை பாலியல் நடவடிக்கைகளுக்காக விற்பனை செய்யும் இணையத்தளங்கள் தொடர்பில் கண்காணிப்புகள் உள்ளனவா என, தொலை தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக் குழுவூடாக விசேட ஆய்வறிக்கையொன்றினை பெற்று அதனை மன்றில் சமர்ப்பிக்குமாறு கொழும்பு மேலதிக நீதிவான் லோச்சனீ அபேவிக்ரம நேற்று உத்தரவிட்டார்.
சிறுமிகள், பெண்களை பாலியல் நடவடிக்கைகளுக்காக விற்பனை செய்யும் வலையமைப்பு தொடர்பில் தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில்யே, 15 வயது சிறுமி ஒருவர் இணையத்தளங்கள் ஊடாக விற்பனை செய்யப்பட்டமை தெரியவந்துள்ள நிலையில் நீதிவான் மேற்படி உத்தரவை பிறப்பித்தார்.
பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோக தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் இந்த விவகாரம் தொடர்பில் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளதன் பின்ணனியிலேயே, நேற்று நீதிவான் இந்த உத்தரவினைப் பிறப்பித்தார்.
பெண்களையும் சிறுமிகளையும் இணையத்தளங்களில் பாலியல் நடவடிக்கைகளுக்காக விற்பனை செய்யும் நடவடிக்கைகள் தொடர்பில் வெளிப்படுத்தப்பட்டுள்ளதன் பின்னணியில், அவ்வாறான இணையத்தளங்கள் தொடர்பில் மேற்பார்வைகள் ஏதும் உள்ளனவா என்பது குறித்தும் வெளிப்படுத்திக்கொள்ளவே நீதிவான் இவ்வறிக்கை கோரலுக்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM