2020 டோக்கியோ ஒலிம்பிக் 800 மீட்டர் ஓட்டப் போட்டியில் பங்கேற்க இலங்கை வீராங்கனை  நிமாலி லியனஆராச்சி தகுதி பெற்றுள்ளார்.

இந் நிலையில் டோக்கியோ ஒலிம்பிக்கில் பெண்கள் 800 மீட்டர் ஓட்டத்தில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்த தகுதி பெற்ற நிமாலி லியனஆராச்சி வீராங்கனைக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிப்பதாக இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

 ஒலிம்பிக் போட்டிகளில் நாட்டிற்காக தனது உச்ச திறமையைக் வெளிக்காட்ட நிமாலிக்கு பலமும் தைரியமும் கிடைக்க பிரார்த்திக்கிறேன் என்றும் அவர் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை சில தினங்களுக்கு முன் இலங்கையின் மெய்வல்லுனர் வீரர்களான யுபுன் அபேகோன் மற்றும் நிலானி ரத்னாயக்க ஆகிய இருவரும் 2020 டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் பங்குபற்றும் வாய்ப்பை உறுதிசெய்துள்ளனர் என தேசிய ஒலிம்பிக் சங்கம் அறிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.