விவசாயிகளின் போராட்டத்தை அடக்குமுறை ஊடாக முடிவிற்குக்கொண்டுவர அரசாங்கம் முயற்சி - அனுரகுமார 

Published By: Digital Desk 4

06 Jul, 2021 | 06:31 AM
image

(நா.தனுஜா)

அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் செயற்பாடுகளின் காரணமாக விவசாயிகளின் பயிர்ச்செய்கை நடவடிக்கைகள் வெகுவாகப் பாதிப்படைந்திருக்கும் நிலையில், அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அவர்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். 

நுகர்வோரை ஏமாற்றியுள்ள சமையல் எரிவாயு நிறுவனத்துக்கு எதிராக அரசாங்கம்  எடுக்கும் நடவடிக்கை என்ன? - அனுரகுமார திஸாநாயக்க கேள்வி | Virakesari.lk

எனினும் ஏற்கனவே இவ்வாறான ஜனநாயகப்போராட்டங்களை வன்முறையைப் பிரயோகித்து அடக்கிய கறுப்பு வரலாற்றைக்கொண்ட அரசாங்கம், விவசாயிகளின் போராட்டத்தையும் அடக்குமுறையின் ஊடாக முடிவிற்குக்கொண்டுவர முற்படுகின்றது.

எனினும் அதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என்பதுடன் விவசாயிகளின் போராட்டத்திற்குத் தலைமைத்துவத்தை வழங்குவதற்கும் தமது கட்சி தயாராக இருப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தலைமைக்காரியாலயத்தில் திங்கட்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் கூறியதாவது:

வெலிமடை பொரளந்த பிரதேசத்தில் விவசாயிகளால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் கலந்துகொண்டதாகவும் அதற்குத் தலைமைத்துவத்தை வழங்கியதாகவும் குறிப்பிட்டு விவசாயிகள் பலர் கைதுசெய்யப்பட்டிருக்கின்றார்கள்.

அனைத்து இலங்கை விவசாயிகள் சம்மேளனத்தின் ஒருங்கிணைப்பாளர் நாமல் கருணாரத்ன, எமது கட்சியின் பதுளை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் வீரகெட்டிய அநிருத்த தேரர் உள்ளடங்கிய மேலும் சிலரைக் கைதுசெய்வதற்குப் பொலிஸார் தயாராகிவருகி;ன்றனர்.

அண்மைக்காலத்தில் நாட்டின் அனைத்துத்தரப்புக்களிலிருந்தும் அரசாங்கத்திற்கு எதிரான அலையொன்று மேலோங்கிவருகின்றது.

விவசாயிகள், மீனவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளடங்கலாகப் பல்வேறு தரப்பினரும் தமது எதிர்ப்பை வெளிப்படுத்திவரும் அதேவேளை, அன்றாட வாழ்க்கையைக் கொண்டுநடத்துவதில் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருக்கும் பொதுமக்களும் அவர்களது எதிர்ப்பை வெளிக்காட்டுகின்றனர்.

குறிப்பாக எரிபொருள் விலையதிகரிப்பானது நாட்டுமக்கள் மத்தியில் பாரிய அதிருப்தியைத் தோற்றுவித்திருக்கின்றது. மக்களின் அடிப்படைத்தேவைகளைப் பூர்த்திசெய்வதற்கு அரசாங்கம் தவறியதன் விளைவாகவே இவ்வனைத்து எதிர்ப்பலைகளும் தோற்றம் பெற்றிருக்கின்றன.

இவற்றில் குறிப்பாக நாட்டின் பல பாகங்களிலிருந்தும் விவசாயிகள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். விவசாயிகள் அவர்களது பயிர்ச்செய்கை மற்றும் உற்பத்தி நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு அவசியமான வசதிகள் வழங்கப்படாததன் காரணமாகவே அவர்கள் போராட்டங்களில் ஈடுபடுகின்றனர்.

இரசாயன உரங்களின் இறக்குமதியை நிறுத்தி, அதற்குப் பதிலாக காபனேற்றப்பட்ட உரங்களைப் பயன்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானம் மேற்கொண்டது. நாம் அதற்கு எவ்வித எதிர்ப்பையும் வெளியிடவில்லை.

எனினும் அந்த உரத்தை உரியவாறு பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காததன் காரணமாக விவசாயிகளின் பயிர்ச்செய்கை நடவடிக்கைகள் வெகுவாகப் பாதிப்படைந்திருக்கின்றன. விவசாயிகளின் வாழ்வாதாரம் அவர்களது கண்முன்னேயே சீர்குலைகின்றது. அதற்கு எதிராகவே அவர்கள் போராடுகின்றார்கள்.

எனவே நாடளாவிய ரீதியில் எந்தவொரு பிரதேசத்தில் விவசாயம் மற்றும் பயிர்ச்செய்கை என்பன பாதிப்படைந்தாலும் அதற்கெதிரான போராட்டத்திற்கு எமது கட்சியும் அனைத்து இலங்கை விவசாயிகள் சம்மேளனமும் தலைமைத்துத்தை வழங்கும்.

ஆனால் அவ்வாறான போராட்டங்களில் ஈடுபடுவோரைக் கைதுசெய்து, அவர்கள்மீது அடக்குமுறையைப் பிரயோகிப்பதற்கு அரசாங்கம் முற்படுகின்றது. மக்களின் இவ்வாறான போராட்டங்களை அடக்குமுறையைப் பிரயோகிப்பதன் மூலம் கட்டுப்படுத்தலாம் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கருதுவாராக இருந்தால், அது வெறும் பகல்கனவாகவே அமையும். மாறாக விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வைப் பெற்றுக்கொடுப்பதன் ஊடாக மாத்திரமே இவற்றை நிறுத்தமுடியும்.

ஆகவே இந்த அடக்குமுறை நடவடிக்கைகள் மற்றும் கைது செய்வதற்கான முயற்சிகள் அனைத்தையும் அரசாங்கம் உடனடியாக நிறுத்தவேண்டும் என்று நாம் வலியுறுத்துகின்றோம். இவ்வாறான ஜனநாயகப்போராட்டங்களில் அடக்குமுறைகளைப் பிரயோகித்ததுடன் மாத்திரமன்றி பலரைப் படுகொலை செய்த கறுப்பு வரலாறு தற்போதைய அரசாங்கத்திற்கு இருக்கின்றது.

பசில் ராஜபக்ஷவினதும் அஜித் நிவாட் கப்ராலினதும் ராஜபக்ஷாக்களினதும் செயற்பாடுகளின் காரணமாகவே தற்போது நாட்டின் பொருளாதாரம் பாரிய நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கிறது. பெருமளவான கடனை மீளச்செலுத்த முடியாமல் அரசாங்கம் திணறிக்கொண்டிருக்கிறது.

பொதுமக்களின் அத்தியாவசியப்பொருட்கள் பலவற்றின் இறக்குமதி இடைநிறுத்தப்பட்டிருக்கிறது. ட்ரில்லியன் பெறுமதியான பணம் புதிததாக அச்சடிக்கப்படுகின்றது. நாட்டின் வளங்களையும் பெறுமதிவாய்ந்த சொத்துக்களையும் விற்பனை செய்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகி;ன்றன.

சீனாவிற்கு ஏற்றவாறு செயற்படக்கூடிய வகையில் கொழும்புத் துறைமுகநகர தொழில்நுட்ப சட்டம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அஜித் நிவாட் கப்ரால் கூறுகின்ற செயற்திறனான நடவடிக்கைகளின் உண்மையான விளைவுகள் இவையேயாகும் என்று குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:01:57
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43