நீடித்து உழைக்கின்ற நுகர்வோர் சாதனங்களின் விற்பனையில் நாட்டில் முன்னிலை வகித்துவருகின்ற சிங்கர் ஸ்ரீலங்கா பீஎல்சி, அண்மையில் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் “Yaal Singer Fiesta” என்ற 4 நாள் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.

இலங்கையில் சிங்கர் நிறுவனம் சந்தைப்படுத்திவருகின்ற உலகத்தரம் வாய்ந்த 40 இற்கும் மேற்பட்ட வர்த்தகநாமங்களின் கீழான உற்பத்திகள் இந்த யாழ் சிங்கர் கொண்டாட்ட நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

சிங்கர் வாடிக்கையாளர்களுக்கு மொபைல் தொலைபேசிகள், டப் (tab) சாதனங்கள் போன்ற தனிப்பட்ட பாவனை சாதனங்கள் முதல் வீட்டுப்பாவனைப் பொருட்கள் மற்றும் சமையலறைச் சாதனங்கள் என பல்வேறு வகையான உற்பத்திகளுக்கு 50% வரையான விலைத் தள்ளுபடிகள் வழங்கப்பட்டன.

நாடளாவியரீதியில் வியாபித்துள்ள 420 இற்கும் மேற்பட்ட காட்சியறைகள் மற்றும் அதற்கு ஈடாக வியாபித்துள்ள விற்பனைக்குப் பின்னரான சேவை வலையமைப்பு அடங்கலாக, தொடர்ச்சியாக வளர்ச்சிகண்டுவருகின்ற நிறுவனத்தின் வலையமைப்பினூடாக சிங்கர் உற்பத்திகள் கிடைக்கப்பெறுகின்றன.

இலங்கையில் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதில் நிறுவனம் கொண்டுள்ள அர்ப்பணிப்புடனான ஈடுபாடானது தொடர்ச்சியாக 10 ஆண்டுகளாக “வருடத்திற்கான மக்களின் அபிமானத்தை வென்றெடுத்த மிகச் சிறந்த வர்த்தகநாமம்” என்ற விருதை வென்றுள்ளதன் மூலமாக தொடர்ச்சியாக நிரூபிக்கப்பட்டு வந்துள்ளது.