(எம்.ஆர்.எம்.வசீம்)
நிர்ணயிக்கப்படும் விலையை விட அதிகவிலைக்கு அரிசி விற்பனை செய்தால் அதற்கான தண்டப்பணத்தை ஒரு இலட்சம் ரூபாவரை அதிகரிக்க முடியுமானவகையில் சட்டம் இயற்றுவதற்கு நடவடிக்கை எடுத்துவருகின்றோம் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.
அரிசியை பதுக்கிவைத்துக்கொண்டு விலையை அதிகரித்து விற்பனையும் வியாபாரிகளுக்கு எதிர்காலத்தில் அரசாங்கம் எடுக்க இருக்கும் நடவடிக்கை தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
நாட்டில் எந்தவகையான அரிசிக்கும் தட்டுப்பாடு ஏற்படாதவகையில் ஒரு இலட்சம் மெட்ரிக்தொன் அரிசியை பாதுகாப்பாக கையிருப்பில் வைத்துக்கொண்டு செல்கின்றோம்.
அதேபோன்று விவசாயிகளுக்கு அரசாங்கம் நிர்ணயித்திருக்கும் நெல்லுக்கான நிர்ணய விலையில் 5சதமேனும் குறைப்பதற்கு இடமளிக்கமாட்டோம்.
தற்போது அரசாங்கம் விவசாயிகளுக்கு 50 ரூபா தொடக்கம் 52ரூபாவரை விலை நிர்ணயம் செய்திருக்கின்றது. அந்த விலைக்கு விவசாயிகளிடமிருக்கும் அனைத்து நெல் தொகைகளையேனும் பெற்றுக்கொள்ள அரசாங்கம் தயாராக இருக்கின்றது.
அத்துடன் இந்த போகத்தில் நெல் அறுவடை இடம்பெறும்போது நுகர்வோர் தொடர்பான திருத்த சட்டமூலம் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்து அனுமதித்துக்கொள்ள இருக்கின்றோம்.
அதன் பின்னர் அதிகவிலைக்கு அரிசி விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு எதிராக விதிக்கப்பட்டிருக்கும் தண்டப்பணத்தை 2ஆயிரத்தி 500 ரூபாவில் இருந்து ஒரு இலட்சம் ரூபாவரை அதிகரிப்போம்.
நிர்ணயிக்கப்படும் விலையைவிட 50சமேனும் அதிகமாக யாராவது அரிசி விற்பனை செய்தாலும் அவர்களுக்கு ஒருஇலட்சம் ரூபா தண்டப்பணம் செலுத்தவேண்டிவரும்.
மேலும் சில்லரை வியாபாரிகளிடம் மாத்திரம் இந்த தண்டப்பணத்தை அறவிடுவதற்கு பதிலாக குறித்த தண்டப்பணத்தில் ஒரு தொகையை, குறித்த வியாபாரிக்கு பொருட்களை விநியோகித்த விநியோகஸ்தரிடமோ அல்லது அரிசி ஆலை உரிமையாளரிடமிருந்தோ பெற்றுக்கொள்ள முடியுமான வகையில், தேவையான திருத்தங்களை குறித்த சட்ட மூலத்தில் மேற்கொள்ள முடியுமா என்பது தொடர்பில் எமது சட்டப்பிரிவு தற்போது கலந்துரையாடி வருகின்றது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM