குளவிக்கூட்டால் அச்சத்தில் மக்கள் ! விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை !

By T Yuwaraj

05 Jul, 2021 | 09:44 PM
image

கொழும்பில் உள்ள குடியிருப்புப் பகுதியொன்றில் இருக்கும் குளவிக் கூட்டினால் அன்றாடம் அச்சத்தில் தமது வாழ்க்கையை நகர்த்துவதாக கொழும்பு - 14 கம்கருபுர தொடர்மாடி குடியிருப்புத் தொகுதியில் வசிக்கும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

No description available.

இதனால் தமக்கு அன்றாடம் அச்சமான நிலை ஏற்படுவதாகவும் குறித்த குளவிக்கூட்டில் உள்ள குளவிகள் கலைந்தால் தமது பிள்ளைகள் உட்பட தமக்கும் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளதாகவும் மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

No description available.

தொடர்மாடியில் உள்ள படிப் பகுதியின் 4 ஆவது மாடியின் படியில் குறித்த குளவிக்கூடு கடந்த 4 மாதங்களாக காணப்படுகின்றது. இந்த தொடர்மாடியில் சுமார் 10 குடும்பங்கள் வசித்து வருகின்றன.

No description available.

இது குறித்து வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் தீயணைப்பு படைப்பிரிவு ஆகியவற்றுக்கு முறைப்பாடளித்துள்ளதாகவும் இதுவரை எவ்வித நடடிக்கையும் எடுக்கவில்லையென அந்தமக்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த தொடர்மாடியில் வசிக்கும் மக்கள், தாம் அதனை அகற்றுவதற்கு முயன்றாலும் அது தமக்கு இயலாத காரியம் என தெரிவிக்கின்றனர்.

No description available.

இதனால் ஆபத்துக்கள் ஏற்படுவதற்கு முன்னர் உரியவர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அம்மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right