சுதந்திரம் மற்றும் மனித உரிமைகளுக்கு பாதுகாப்பற்ற சூழலை ஹொங்கொங்கின் தேசிய பாதுகாப்பு சட்டம் உருவாக்கியுள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் திகதி இயற்றப்பட்ட இந்த சட்டம் ' தேசிய பாதுகாப்பு' என்ற போர்வையில் படுமோசமாக அடக்குமுறைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளது
குறிப்பாக தேசிய பாதுகாப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர் கடந்த ஒரு வருடத்தை எடுத்துக்கொண்டால் நாட்டை பொலிஸ் ஆட்சியாக மாற்றுவதற்கான செயற்பாடுகளே இடம்பெற்றுள்ளதாக சர்வதேச மன்னிப்பு சபையின் ஆசிய -பசிபிக் பிராந்திய பணிப்பாளர் யாமினி மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
அரசியல், கலாச்சாரம், கல்வி மற்றும் ஊடகங்கள் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் வொங்கொங்கின் தேசிய பாதுகாப்பு சட்டம் தாக்கம் செலுத்தியுள்ளது. இது பொது மக்களுக்கு பாரியதொரு அச்சுறுத்தலான விடயமாகும். அடக்குமுறையுடன் சீனாவை ஒத்திருக்கவே இந்த சட்டம் வலியுறுத்துகின்றது.
எனவே சுதந்திரங்களை வெறுமனே கட்டுப்படுத்துவதற்கு தேசிய பாதுகாப்புக்கு ஆபத்து என்ற அதிகப்படியான பரந்த வரையறையைப் பயன்படுத்துவதை ஹொங்கொங் அரசாங்கம் நிறுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
சர்வதேச இராஜதந்திரிகளுடன் தொடர்புகள் மற்றும் சமூக ஊடக பயன்பாடு உள்ளிட்ட செயற்பாடுகள் குறித்து தீவிரமாக கண்காணிப்படுவதுடன் குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில் அவர்கள் குறிவைக்கப்படுகின்றனர். சீனாவில் மோசமடைந்து வரும் மனித உரிமை நிலைமை குறித்து அவசர விவாதத்தைத் தொடங்க ஐக்கிய நாடுகள் சபையின் பொறுப்பு உள்ளதுடன் ஹொங்கொங்கின் தேசிய பாதுகாப்பு சட்டம் குறித்தும் கவனத்தில் கொள்ளப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM