இலங்கை கிரிக்கெட் வீரர் பானுக்க ராஜபக்ஷவுக்கு சகல விதமான கிரிக்கெட்களிலுமிருந்து 2 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட ஒரு வருட போட்டித் தடை விதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், 5000 அமெரிக்க டொலர்கள்  அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமூக மற்றும் பிற ஊடகங்களில் நேர்காணல்களில் கலந்து கொண்டதன் மூலம் வீரர்களுக்கான 2019/2020 க்குரிய ஒப்பந்தத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கடப்பாடுகளை மீறினார் என்ற குற்றத்தின் பேரில் அவருக்கு ஒத்திவைக்கப்பட்ட ஒரு வருட போட்டித்தடை விதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.