தெல்கொட - சியம்பலாபே பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று (01) இடம்பெற்றுள்ளது.

குறித்த நபர் தனது மனைவி மற்றும் மற்றுமொறு பெண்ணுடன் முச்சக்கரவண்டியில் பயணித்துக்கொண்டிருந்த போது முகத்தில் முகமூடியணிந்திருந்த அடையாளம் தெரியாத குழுவொன்று குறித்த நபரை தாக்கி கொலை செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மீகஹாவத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.