தடுப்பூசி வழங்கும் பணிகளில் இராணுவமும் இணைவு

Published By: Digital Desk 4

05 Jul, 2021 | 09:35 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டில் கொவிட் கட்டுப்படுத்தல் செயற்பாடுகளில் தடுப்பூசி வழங்கும் பணிகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதுவரையில் இலங்கையில் அஸ்ட்ரசெனிகா, சைனோபார்ம் மற்றும் ஸ்புட்னிக் ஆகிய தடுப்பூசிகள் வழங்கப்பட்டன. இந்நிலையில் இன்றைய தினம் அமெரிக்காவின் பைசர் தடுப்பூசிகளும் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டன.

இன்றைய தினம் பெற்றுக்கொள்ளப்பட்ட 26 000 பைசர் தடுப்பூசிகளை அஸ்ட்ரசெனிகா தடுப்பூசிகளைப் முதற்கட்டமாக பெற்றுக் கொண்டவர்களுக்கு வழங்க தடுப்பூசி தொடர்பான சுகாதார அமைச்சின் நிபுணர்கள் குழு அனுமதி வழங்கியுள்ளதாக இராஜாபங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.

அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தில் 200 000 பைசர் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்ள கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தென்னாசியாவில் முதன்முறையாக பைசர் தடுப்பூசியைப் பெற்றுக் கொண்ட நாடு இலங்கையாகும் என்று அரச தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் கடந்த மார்ச் மாதம் 25 ஆம் திகதி கொவெக்ஸ் திட்டத்தின் ஊடாக யுனிசெப் அமைப்பினால் மாலைதீவிற்கு 5850 பைசர் தடுப்பூசிகள் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளதாக அவ் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை இன்று திங்கட்கிழமை முதல் மேல் மாகாணத்தில் 30 வயதுக்கு மேற்பட்ட சகலருக்கும் சைனோபார்ம் முதற்கட்ட தடுப்பூசி வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு தடுப்பூசி வழங்கும் பணிகளை துரிதப்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கும் முகமாக இராணுவத்தினரால் நடமாடும் தடுப்பூசி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதோடு , சைனோபார்ம் தடுப்பூசி வழங்கும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அதன்படி கொழும்பு இராணுவ வைத்தியசாலை (நாராஹேன்பிட்டி), பத்தரமுல்லை தியத உயன, பானாகொடை  இராணுவ விகாரை மற்றும்  வெஹரஹேர முதலாவது இலங்கை இராணுவ  வைத்திய படையணி தலைமையகம் என்பவற்றில்  நிறுவப்பட்டுள்ள தடுப்பூசி ஏற்றுவதற்கான நிலையங்களில் இன்று முதல் நாளாந்தம் 8.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை மேல் மாகாணத்தை சேர்ந்த 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான முதல் தடுப்பூசி ஏற்றும் பணிகளை ஆரம்பிக்கப்படும்.  

இவ்வாறு தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள வருவோர் மின்சார பட்டியல் அல்லது தொலைபேசி கட்டண ரசீதுகளுடன் நிரந்தர வதிவிடத்தை உறுதிப்படுத்துவதற்கான கிராம சேவகரால் வழங்கப்பட்ட உறுதி பத்திரம் அல்லது அடையாள அட்டை அல்லது வாக்காளர் அட்டையை கொண்டு வருதல் அவசியமாகும்.

இதேபோன்று இராணுவத்தினால் நிர்வகிக்கப்படும் தடுப்பூசி ஏற்றும் சமூக நிலையங்கள் காலி வித்தியாலோக வித்தியாலயம் (காலி மாவட்டம்), மாத்தறை மஹிந்த ராஜபக்‌ஷ வித்தியாலயம் (மாத்தறை மாவட்டம்), மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகம் தியதலாவை (பதுளை மாவட்டம்), அனுராதபுரம் இராணுவ வைத்தியசாலை (அனுராதபுரம் மாவட்டம்), காலாட்படை பயிற்சி பாடசாலை மின்னேரிய (பொலன்னறுவை மாவட்டம்), கிளிநொச்சி இராணுவ ஆதார வைத்தியசாலை (கிளிநொச்சி மாவட்டம்) மற்றும் புதுகுடியிருப்பு மத்தியக் கல்லூரி, (முல்லைத்தீவு மாவட்டம்) மற்றும் மன்னார் இலங்கை முதலீட்டுச் சபை கட்டிடம் (மன்னார் மாவட்டம்) ஆகியன ஒரே நேரத்தில் 60 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு தடுப்பூசி ஏற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வரவு - செலவுத்திட்டம் - 2026...

2025-11-07 17:30:55
news-image

உள்ளூராட்சி மன்ற சேவைகளை வினைத்திறனாக்க நிதி...

2025-11-07 17:30:43
news-image

ஆசிரிய கலாசாலை மாணவர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு...

2025-11-07 17:31:28
news-image

யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளை நிர்மாணித்துக் கொள்ள...

2025-11-07 17:27:18
news-image

பல்கலைக்கழக மாணவர்களுக்கான மஹபொல கொடுப்பனவு அதிகரிக்கப்படும்...

2025-11-07 17:25:35
news-image

இயற்கை அனத்தங்களால் பாதிக்கப்பட்ட 1200 குடும்பங்களுக்காக...

2025-11-07 17:22:24
news-image

2026 மூன்றாம் காலாண்டில் டிஜிட்டல் அடையாள...

2025-11-07 17:21:43
news-image

தெங்கு பயிர்ச்செய்கையை மேம்படுத்த வடக்கு தென்னை...

2025-11-07 17:13:16
news-image

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வீட்டுக்...

2025-11-07 17:08:18
news-image

கிரான், பென்டுகால் பாலங்கள் அபிவிருத்திக்கு நிதி...

2025-11-07 17:09:47
news-image

இலங்கை மின்சார சபை மறுசீரமைக்கப்படும் -...

2025-11-07 17:02:58
news-image

கொழும்பில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான...

2025-11-07 16:56:46