லோகன் பரமசாமி

எதேச்சதிகாரத்தின் வளர்ச்சி தற்போதைய உலகில் தாராள ஜனநாயக நாடுகளுக்கு பெரும் சவாலாக இருக்கிறது என்பது கடந்த சில வருடங்களாக மேற்குலக நாட்டு சிந்தனையாளர்களது கருத்தாகும். எந்தவொரு நாட்டிலும் ஆட்சியில் உள்ள தனி நபரை அல்லது அதிகார குழுவை அந்தநாட்டுச் சட்டம் கட்டுப்படுத்த முடியாத நிலை உள்ளதோ அங்கே எதேச்சதிகாரம் நிலவுகிறது என்பது தான் மிக அடிப்படையான விளக்கமாகும்.

கடந்த ஜனவரி 6ஆம் திகதி வொஷிங்டனில் காங்கிரஸ் கட்டடத்தின் மீதான தாக்குதலும்,தனது பதவிக்காலம் ஒரு தடவையுடன் முடிவடைகிறது என்பதையும் உணர்ந்து கொண்ட முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஏதேச்சதிகாரமாக நடந்து கொண்டமையானது ஜனநாயகத்திற்கு ஏற்பட்ட பெரும்சவாலாகவே அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் காண்கின்றார்.

இதனால் தனது தலைமையின் கீழ் அமெரிக்காவை உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் மீளமைவு செய்துகொள்வதற்கு நடவடிக்கைகளை எடுத்துள்ளார் பைடன். அமெரிக்கா தற்பொழுது தான், தானொரு அசைக்க முடியாத சக்தியல்ல என்பதை உணர ஆரம்பித்துள்ளது. 

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-07-04#page-8

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.