மழைக்கால காளான்களாக பிஞ்சுகளின் பெரும் புதைகுழிகள் -  “கனடிய காலனித்துவ வரலாற்றின் கறைபடிந்த பக்கங்கள்”

Published By: Digital Desk 2

05 Jul, 2021 | 04:54 PM
image

சதீஷ் கிருஷ்ணபிள்ளை

 கனடிய தேசம் மீண்டும் கலங்கிப் போயிருக்கிறது. கறைபடிந்த வரலாற்றின் இருண்ட பக்கங்களால் தேசத்தின் மனசாட்சி உலுக்கப்பட்டிருக்கிறது. 

மண்ணின் உரிமையாளர்களான பூர்வீகப் பழங்குடிகள் மீது வந்தேறு குடிகள் கட்டவிழ்த்த அராஜகம். அதனை அரசும், கத்தோலிக்க திருச்சபையும் திட்டமிட்டு மறைக்க முனைந்தாலும்,அதே மண்ணில் இருந்து புதிது புதிதாக பெரும் புதைகுழிகள் கண்டுபிடிக்கப்படுகின்றன.  

அந்தப் புதைகுழிகள், ஏற்கெனவே நிரூபிக்கப்பட்டதை விடவும் மிகப் பயங்கரமான வரலாறு பற்றிய உண்மைகளைக் கோரி நிற்கின்றன. புதைகுழிகளில் மீளாத்துயில் கொள்பவர்கள்,பூர்வீகப் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த பிஞ்சுகள். 

கனடிய சமூகத்தில் பூர்வீக பழங்குடி மக்களின் அடையாளத்தை இல்லாதொழித்து.ஐரோப்பிய அடையாளத்தை வலிந்து திணிப்பதற்காக வந்தேறு குடிகள் ஸ்தாபித்த கொடூரமான பாடசாலைக் கட்டமைப்பின் பலிக்கடாக்கள். 

ஐரோப்பாவில் இருந்து கனடிய மண்ணை ஆக்கிரமித்தவர்கள், பழங்குடிக் குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளை வலுக்கட்டாயமாக பறித்தெடுப்பார்கள். அந்தப் பிள்ளைகள் வதிவிடப் பாடசாலையில் "கல்வி கற்பது” கட்டாயம். ஒன்றல்ல. இரண்டல்ல. ஏறத்தாழ ஒன்றரை இலட்சம் பிள்ளைகள்.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-07-04#page-8

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்