நடிகர் சூரியின் பின்னணி குரலுடன் 'அன்புள்ள கில்லி' முன்னோட்டம் வெளியீடு ( விடியோ இணைப்பு)

Published By: Digital Desk 4

05 Jul, 2021 | 05:19 PM
image

செல்லப் பிராணியான நாய் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'அன்புள்ள கில்லி' படத்திற்கு பிரபல நகைச்சுவை நடிகர் சூரி பின்னணி குரல் கொடுத்திருக்கிறார். இதன் முன்னோட்டம் அண்மையில் வெளியானது. இதனை நடிகர் சூரி மற்றும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் தங்களது இணையப்பக்கத்தில் வெளியிட்டனர்.

'உனக்கென்ன வேணும் சொல்லு' என்ற படத்தை இயக்கிய இயக்குனர் ராமலிங்கம் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'அன்புள்ள கில்லி'. இந்தப்படத்தில் நடிகர் மைத்ரேய ராஜசேகர், நடிகைகள் துஷாரா விஜயன், சாந்தினி தமிழரசன், மைம் கோபி, விஜே ஆஷிக், நாஞ்சில் விஜயன், இளவரசு, 'பூ' ராமு, இந்துமதி, ஸ்ரீரஞ்சனி மற்றும் பேபி கிருத்திகா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அத்துடன் இந்த படத்தில் பலரது இல்லங்களில் செல்லப்பிராணியாக வளர்க்கப்படும் லாப்ரடர் இன நாய் ஒன்றும் நடித்திருக்கிறது. பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு, ஆரோல் கொரோலீ இசையமைத்திருக்கிறார்.

இப்படத்தில் நடித்திருக்கும் செல்ல பிராணியான நாய் ஒன்றிற்கு நடிகர் சூரி பின்னணி குரல் கொடுத்திருக்கிறார். இது தொடர்பாக அவர் பேசுகையில்' எம்முடைய வாழ்க்கையில் முதன்முறையாக சக ஜீவராசி ஒன்றுக்கு குரல் கொடுத்திருக்கிறேன். இத்தகைய புதிய முயற்சியை மேற்கொண்ட படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவிக்கிறேன்.இந்த புதிய முயற்சிக்கு அனைவரும் ஆதரவு தெரிவிக்க வேண்டும்' என்றார்.

முன்னோட்டத்தில் நாயிற்கு சூரியின் குரல் பொருத்தமாக இருப்பதாக ஏராளமான சிறார்கள் லைக்குகளும், கமெண்டுகளும் தெரிவித்து வருவதால்,  'அன்புள்ள கில்லி' முன்னோட்டத்திற்கு எதிர்பாராத வகையில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.

இதனிடையே நாயை மையப்படுத்தி ஏற்கனவே 'சார்லி 777' என்ற திரைப்படத்தின் டீசர் வெளியாகி இணையத்தில் சாதனை படைத்திருக்கிறது என்பதும், 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி 'அண்டாவ காணோம்' என்ற படத்தில் அண்டாவிற்கு பின்னணி குரல் கொடுத்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதிய முயற்சியாக முதலில் இரண்டாம் பாகத்தை...

2024-04-18 17:34:41
news-image

சாதிய அரசியலை அலசும் அண்ட்ரியாவின் 'மனுசி'

2024-04-18 17:31:38
news-image

நடிகர் மன்சூர் அலிகான் வைத்தியசாலையில் அனுமதி...

2024-04-18 13:17:36
news-image

சுப்பர் ஸ்டார் ரஜினியின் பாராட்டைப் பெற்ற...

2024-04-17 17:43:13
news-image

இயக்குநர் ஷங்கரின் இல்ல திருமண வரவேற்பில்...

2024-04-17 17:37:23
news-image

சீயான் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' திரைப்படத்தின்...

2024-04-17 17:39:11
news-image

வல்லவன் வகுத்ததடா - விமர்சனம்

2024-04-17 17:39:57
news-image

மோகன் நடிக்கும் 'ஹரா' படத்தின் டீசர்...

2024-04-16 17:39:18
news-image

கெட்ட வார்த்தைகளை பேசி ரசிகர்களை வசப்படுத்தி...

2024-04-16 17:43:10
news-image

தமிழர்களின் பாரம்பரிய கலைக்கு ஆதரவளிக்கும் ராகவா...

2024-04-16 17:45:02
news-image

டிஜிட்டல் தள ரசிகர்களின் வரவேற்பை பெறுமா...

2024-04-16 17:45:54
news-image

மே மாதத்தில் வெளியாகும் வரலட்சுமி சரத்குமாரின்...

2024-04-16 17:41:35