நடக்குமா மாகாணசபைத் தேர்தல் ? என்ன செய்யப்போகிறது இந்தியா ?

By Digital Desk 2

05 Jul, 2021 | 04:52 PM
image

சி.அ.யோதிலிங்கம்

“மாகாண சபைகளுக்கு காணப்பட்ட குறைந்தளவான அதிகாரங்களும் தொடர்ச்சியாகபிடுங்கப்பட்டு தற்போது வெறும் எலும்புக்கூடே மிஞ்சியிருக்கின்றது”  

மாகாணசபைத் தேர்தல், மாகாணசபை முறை, மாகாணசபைகளின் அதிகாரங்கள் என்பன தொடர்பான உரையாடல்கள் மீண்டும் அரங்கிற்கு வந்துள்ளன.

  

இந்திய உயர்ஸ்தானிகர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சந்திப்பு வட பகுதி பொது மருத்துவமனைகள் மத்திய அரசின் கீழ் கொண்டுவர முயற்சித்தல், வடபகுதியிலுள்ள சில பாடசாலைகளை தேசியப் பாடசாலைகளாக தர முயர்த்துதல் என்பனவே இதுபற்றிய உரையாடல்களுக்கு காரணங்களாக இருந்தன.

  

மாகாணசபை முறை 1987ஆம் ஆண்டு ஜுலை மாதம் 29ஆம் திகதி கைச்சாத்திடப்பட்ட இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் படி உருவாக்கப்பட்டது.அந்த ஒப்பந்தத்தில் தமிழ்த் தரப்பு கைச்சாத்திடவில்லை. மாறாக தமிழ்த் தரப்பு சார்பில் இந்தியாவே கைச்சாத்திட்டது. இதனை ஒருவகையில் இந்தியாவின் திணிப்பு எனக் கூறலாம். ஏனெனில் மாகாணசபை முறை சிங்களத்தரப்பையும் திருப்திப்படுத்தவில்லை. தமிழ்த்தரப்பையும் திருப்திப்படுத்தவில்லை.

மாகாணசபை முறையிலுள்ள குறைபாடுகளை தமிழர் விடுதலைக் கூட்டணியின் தூதுக்குழு அப்போதய பிரதமர் ராஜீவ் காந்தியிடம் நேரடியாக முறையிட்ட போதும் அது சீர் செய்யப்படவில்லை.இதற்கு முன்னரே ஒப்பந்தம் கைச்சாத்திடுவதற்கு முதல்நாள் புதுடில்லியில் பிரபாகரனுக்கும் ராஜீவ் காந்திக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றது. அச்சந்திப்பில் வடக்கு, கிழக்கு தற்காலிகமாக இணைக்கப்பட்டுள்ளது என்ற குறைபாடு பிரதானமாக சுட்டிக்காட்டப்பட்டது. 

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-07-04#page-7

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right