சீன சீருடை மர்மங்கள்

By Digital Desk 2

05 Jul, 2021 | 03:52 PM
image

ஹரிகரன்

 இலங்கையில் சீன இராணுவத்தினர் இருக்கின்றனரா இல்லையா என்ற விவகாரம் இப்போது சூடுபிடித்திருக்கிறது.

திஸ்ஸமகாராம வாவியைப் புனரமைக்கும் வேலையில் ஈடுபட்டிருந்த சீனர்கள், அணிந்திருந்த சீருடை தான் இந்தக் கேள்வி எழுவதற்குக் காரணம்.

இந்த விவகாரத்தில் கிளம்பிய சர்ச்சைகளுக்குப் பின்னர் தான்,தொல்பொருள் திணைக்களம் தங்களிடம் அனுமதி பெற்றுக் கொண்டு வாவியை ஆழப்படுத்தும் பணி முன்னெடுக்கப்படவில்லை என்று கூறி, அதற்குத் தடைவிதித்தது.

சீன நிறுவனங்களின் பணியாளர்கள் இராணுவப் பாணியிலான உருமறைப்பு சீருடைகளை அணிவதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பாதுகாப்பு அமைச்சு அறிவுறுத்தியிருக்கிறது.

ஒரு ஊடகம் கிளப்பிய சர்ச்சைகள் தான் இரண்டு முக்கியமான தடைகளுக்கு காரணமாகியிருக்கிறது.

திஸ்ஸமகாராம வாவியின் புனரமைப்பு பணிகளில் சீன இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனரா என்று கேள்வி எழுப்பிய ஊடகத்தின் மீது சீனத் தூதரகம் விமர்சனங்களை முன்வைத்திருந்த போது, அந்த செய்தியின் விளைவாகத் தான், இரண்டு தடைகளும் விதிக்கப்பட்டிருக்கின்றன.

எனவே, சீன இராணுவத்தினர் இலங்கையில் தங்கியுள்ளனரா ? இல்லையா ? என்பதைவிட, நாட்டின் சட்டத்திட்டங்களுக்கு மாறான விடயங்கள் அந்த சீருடைக்குப் பின்னால் நடந்து கொண்டிருந்தமை உறுதியாகியிருக்கிறது.

வடக்கு, கிழக்கில் உள்ள தொல்பொருள் சின்னங்கள் அழிக்கப்படுவதில் இருந்து, தமது அரசினால் பாதுகாக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது சாதனைகளில் ஒன்றாக அண்மையில், நிகழ்த்திய உரையின் போது குறிப்பிட்டிருந்தார்.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-07-04#page-3

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right