(எம்.மனோசித்ரா)

பொலிஸாரால் நேற்று முன்னெடுக்கப்பட்ட சுற்றி வளைப்புக்களில் 210 கிராம் ஹெரோயினுடன் 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

சப்புகஸ்கந்த பொலிஸாரால் களனி மற்றும் றாகமை ஆகிய பிரதேசங்களில் முன்னெடுக்கப்பட்ட சுற்றி வளைப்புக்களில் 80 கிராம் ஹெரோயினுடன் 33 மற்றும் 31 வயதுடைய சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

களுத்துறை தெற்கு பொலிஸாரால் 120 கிராம் ஹெரோயினுடன் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு - கிராண்ட்பாஸ் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் 8 கிராம் ஹெரோயினுடன் 36 வயதுடைய சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.