பொலிஸ் அதிகாரிகள் முகங்கொடுத்துள்ள பல்வேறு பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதற்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கவனம் செலுத்தியுள்ளார். 

அந்தவகையில் பொலிஸ் அதிகாரிகளின் பதவி உயர்வு தொடர்பாக ஒரு முறையான முறைமையைப் பின்பற்றவும் மேல்மட்டம் முதல் கீழ்மட்டம் வரையிலான சகல மட்டங்களிலும் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு உடனடி நிகழ்ச்சித் திட்டமொன்றை ஆரம்பிக்குமாறும் ஜனாதிபதி பொலிஸ் ஆணைக்குழுவுக்கும் பொலிஸ் மா அதிபருக்கும் ஆலோசனை வழங்கியுள்ளார். 

பொலிஸ் அதிகாரிகள் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகள் அவ்வப்போது ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளதோடு, மக்களுக்கு மிகவும் வினைத்திறன்மிக்க ஒரு சேவையை பெற்றுக்கொடுப்பதற்காக  அப்பிரச்சினைகளை உடனடியாகத் தீர்த்துவைப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.