என்.கண்ணன்

யாழ்ப்பாணத்துக்கு மே மாத இறுதியில் சீனாவின் 50 ஆயிரம் சினோபார்ம் தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்பட்ட போது,ஆரம்பத்தில் அதனை பெற்றுக் கொள்வதற்கு மக்கள் ஆர்வம் காட்டவில்லை.

முதல் மூன்று நாட்களிலும் குறைந்தளவானோரே தடுப்பூசி ஏற்றிக் கொண்டனர். அதற்குப் பின்னரே பலரும் முண்டியடித்து அதனைப்போட்டுக் கொண்டனர்.

சீனாவின் தடுப்பூசி குறித்து எழுப்பப்பட்ட சந்தேகங்களும், அதனை சுற்றி இருந்து வந்த சர்ச்சைகளும் தான், அந்த நிலைமைக்குக் காரணம்.  

அதனைவிட இங்குள்ள பலருக்கும் இப்போது சீன காய்ச்சல் தொற்றியிருக்கிறது என்றொரு கருத்தும் இருக்கிறது.

எதற்கெடுத்தாலும் சீனாவைக்குற்றம்சாட்டுகின்ற, சீனா மீது சந்தேகப்படுகின்ற போக்கு காணப்படுவதான விமர்சனங்கள் உள்ளன.

வடக்கில் மாத்திரமன்றில் தெற்கிலும் கூட இந்தக் காய்ச்சல் இப்போது பரவி வருகிறது.

யாழ்ப்பாணத்தில் முதற் கட்டமாக 50 ஆயிரம் சினோபார்ம் தடுப்பூசிகள் போடப்பட்ட போது, சீன தூதரகத்தின் டுவிட்டர் பக்கத்தில் அதுகுறித்த படங்கள் வெளியிடப்பட்டதுடன், யாழ்ப்பாண மக்களுக்காக அதனை வழங்கியதற்காக பெருமைப்படுவதாகவும், பதிவிடப்பட்டிருந்தது.

அதாவது வடக்கின் மீதான சீனாவின் கவனம் குறித்து தமிழர்கள் மத்தியில் காணப்படும் சந்தேகம், அதிருப்தி என்பனவற்றுக்கு அப்பால், சீனாவும் இதனை முக்கியமானதொன்றாக பார்க்கிறது என்பதை,சீனத் தூதரகத்தின் அந்தப் பதிவில் இருந்து உணர முடிந்தது.

இந்தநிலையில், அண்மையில் ஒரு புதிய சர்ச்சை வடக்கில் உருவாகியிருக்கிறது.

பூநகரிக்கு அப்பாலுள்ள கௌதாரிமுனையில், அமைக்கப்பட்டிருக்கும் கடலட்டைப் பண்ணையே அதற்குக் காரணம்.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-07-04#page-1

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.