(எம்.மனோசித்ரா)

எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் வலு சக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினரால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்திற்கான தினம் சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தனவினால் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய எதிர்வரும் 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் குறித்த நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதங்கள் இடம்பெறவுள்ளது. இன்று திங்கட்கிழமை பாராளுமன்றத்தில் நடைபெற்ற கட்சி தலைவர் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் பாராளுமன்ற அமர்வுகளை நாளை (06.07.2021) முதல் எதிர்வரும் 9 ஆம் திகதி வரை நடத்துவதற்கும் கட்சி தலைவர் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.