பான் கீ மூனின் கவ­னத்தை ஈர்க்கும் வகையில் இன்று யாழில் போராட்டம்

Published By: Robert

02 Sep, 2016 | 09:24 AM
image

மீள்­கு­டி­யேற்றம், காணாமல் போனோர் விவ­காரம், அர­சியல் கைதிகள் விடயம் என்ப­வற்­றுக்கு தீர்­வு­கா­ணு­மாறு வலி­யு­றுத்­தியும் போர்க்­குற்­றங்கள் தொடர்பில் சர்­வ­தேச பக்­கச்­சார்­பற்ற விசா­ரணை நடத்த வலி­யு­றுத்­தியும் இன்று யாழ்ப்­பா­ணத்தில் கவ­ன­யீர்ப்புப் போராட்டம் இடம்­பெ­ற­வுள்­ளது.

ஐ.நா.செய­லாளர் நாயகம் பான் கீ மூனின் வரு­கையை முன்­னிட்டு அவ­ரது கவ­னத்தை ஈர்க்கும் வகையில் இந்தப் போராட்டம் இன்­று­காலை 8.30 மணிக்கு யாழ். பொது நூல­கத்­திற்கு முன்­பாக இடம்­பெ­ற­வுள்­ளது.

இது குறித்து தமிழ் தேசிய மக்கள் முன்­ன­ணியின் செய­லாளர் செ. கஜேந்­திரன் விடுத்­துள்ள அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது:-

ஐக்­கிய நாடுகள் சபையின் செய­லாளர் நாயகம், பான்கீ மூன் இன்று வௌ்ளிக்­கி­ழமை யாழ்ப்­பாணம் விஜயம் செய்­ய­வுள்ளார். அவ­ரது விஜ­யத்­தின்­போது யுத்தம் முடிந்து ஏழு ஆண்­டு­க­ளா­கியும் மீள் குடி­யேற அனு­ம­திக்­கப்­ப­டா­துள்ள மயி­லிட்டி, பலாலி உள்­ளிட்ட வலி­வ­டக்கு, கேப்­பா­பி­லவு உட்­பட வடக்கு கிழக்கு பிர­தே­சங்­களில் இடம்­பெ­யர்ந்த மக்­களின் உட­னடி மீள் குடி­யேற்­றத்தை வலி­யு­றுத்­தியும்! போரின் போதும், அதற்குப் பின்­னரும் கடத்­தப்­பட்டும், சர­ண­டைந்­த­பின்னர் காணாமல் போகச் செய்­யப்­பட்­ட­வர்­க­ளுக்கு என்ன நடந்­த­தென கண்­ட­றிய வலி­யு­றுத்­தியும்!

அர­சியல் கைதிகள் அனை­வ­ரையும் நிபந்­த­னை­யின்றி உடன் விடு­விக்க நட­வ­டிக்கை எடுக்க வலி­யு­றுத்­தியும்! போர்க்­குற்­றங்கள், இன­வ­ழிப்புக் குற்­றங்கள் தொடர்பில் சர்­வ­தேச பக்கச் சார்­பற்ற விசா­ரணை நடாத்த நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என வலி­யு­றுத்­தியும்!

உட்­பட தமிழ் மக்கள் எதி்­நோக்­கி­வரும் பிரச்­சி­னை­க­ளுக்கு ஐ.நா நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என வலி­யு­றுத்­தியும் கவ­ன­யீர்ப்பு போராட்டம் நடை­பெ­ற­வுள்­ளது. இடம்­பெ­யர்ந்த மக்கள் அமைப்­புக்கள், காணாமல் போகச் செய்­யப்­பட்­ட­வர்­களின் உற­வி­னர்­க­ளது அமைப்­புக்கள், போரில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் அமைப்புக்கள் உள்ளிட்ட பொது அமைப்புக்கள் இணைந்து நடாத்தவுள்ள மேற்படி போராட்டத்தில் அனைவரையும் கலந்து கொண்டு ஆதரவு வழங்குமாறு அழைக்கின்றோம்.

இதேவேளை மயிலிட்டி மக்கள் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கீ மூன் முன்னிலையில் அமைதியாக ஆர்ப்பாட்டத்தில் இன்று 2 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஈடுபட்டுள்ளனர்.

இது தொடர்பான ஆலோசனைகள் கலந்துரையாடல் ஒன்று பருத்தித்துறை காயாபாரிமுலையில் இடம்பெயர்ந்து வாழும் மக்கள் மத்தியில் நேற்று 1 ஆம் திகதி வியாழக்கிழமை பகல் 4 மணிக்கு மீள்குடியேற்றத்தவர் அ.குணபாலசிங்கம் தலைமையில் இடம்பெற்றது.

மீள்குடியேற்றம் தொடர்பாக அம்மக்களை அரசு வாங்க முயற்சிக்கின்றது. இது குறித்து நேரம் ஒரு கருத்துச் செல்லப்படுகிறது. இவற்றைக் கவத்தில் கொள்ளாது மீள்குடியேற்றச் சங்கம் தெரிவிக்கும் கருத்துக்களைக் கேட்டுச் செயல்படுமாறு வேண்டுகிறோம்.

ஆவளைச் சந்திவரை காடு காப்பதாக படையினர் தெரிவித்துள்ளனர். வீதியின் வடக்குப்புறத்தில் உள்ள மயிலிட்டி கிராமம் முழுவதும் உடனடியாக காடுகாக்கப்பட வேண்டும். அம்மக்கள் சொந்த மண்ணில் குடியேறி அமைதியான வாழ்க்கை வாழ அனுமதிக்க வேண்டும்.

இன்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் வருகை தரவுள்ள பான் கீ மூன் முன்னிலையில் எம்மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து அமைதியான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். அதற்குத் தயாராக மக்கள் அனைவரும் இன்று வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு நல்லூர் கந்தசுவாமி கோவில் முன்பாக ஒன்றுகூட அழைப்புவிடுக்கிறோம். அங்கிருந்தவாறே அங்கு போராட்டத்தை மேற்கொள்வது குறித்த சந்தர்ப்ப சூழல்களை வைத்து முடிவு செய்யப்படும் என மீள்குடியேற்றத் தலைவர் அ.குணபாலசிங்கம் செயலாளர் எஸ். அந்தோனிப்பிள்ளை ஆகியோர் மயிலிட்டி மக்கள் மத்தியில் கருத்துரைத்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33