யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் இன்று மாலை வாள் வெட்டுக்குழு ஒன்று அட்டகாசத்தில் ஈடுபட்டுவிட்டு தப்பி சென்றுள்ளது.

கொடிகாமம் கெற்பலி பகுதியில் உள்ள வீடொன்றினுள் இன்று மாலை வாள்களுடன் புகுந்த கும்பல் வீட்டில் இருந்தவர்களை அச்சுறுத்தல் விடுத்து வீட்டின் மீதும் , வீட்டினை சுற்றி இருந்த வேலிகள் மீது தாக்குதல் நடாத்தி விட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கொடிகாம பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வீட்டில் இருந்தோரிடம் முறைப்பாட்டினை பெற்று அதனடிப்படையில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.