வெளியான புதிய சுகாதார வழிகாட்டல்களில் உள்ளடக்கப்பட்டுள்ளவை இவை தான் !

Published By: Digital Desk 4

04 Jul, 2021 | 08:44 PM
image

(எம்.மனோசித்ரா)

மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து கட்டுப்பாடுகள் நாளை திங்கட்கிழமையிலிருந்து மேலும் இரு வாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ள நிலையில் , குறித்த இரு வாரங்களில் சகல துறைகளிலும் பின்பற்றப்பட வேண்டிய புதிய சுகாதார ஆலோசனை வழிகாட்டல்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ளன. குறித்த வழிகாட்டல்களில் மேல் மாகாணத்திற்கான விசேட அறிவித்தல்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

போக்குவரத்து தளர்வுகளின் பின்னரான சுகாதார வழிகாட்டல் வெளியானது | Virakesari .lk

போக்குவரத்து

மேல் மாகாணத்தில் பொது போக்குவரத்து சேவைகளில் ஆசனங்களின் எண்ணிக்கையில் 30 வீதத்திற்கு மாத்திரமே பயணிகளை அனுமதிக்க முடியும். ஏனைய மாகாணங்களில் 50 வீதத்திற்கு பயணிகளை ஏற்றிச் செல்ல முடியும். எனினும் மேல் மாகாணம் உள்ளிட்ட ஏனைய சகல மாகாணங்களிலும் முச்சகரவண்டி மற்றும் கார் உள்ளிட்ட வாடகை வாகனங்களில் ஆசன எண்ணிக்கைக்கு அமைய பயணிக்க முடியும்.

அரச மற்றும் தனியார் சேவை நிறுவனங்கள்

பயன்பாட்டு சேவை மற்றும் வேறு அத்தியாவசிய சேவை நிறுவனங்கள் , அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் என்பவற்றில் தேவையானவு மிகக் குறைவான ஊழியர்களை கடைமைக்கு அழைப்பதோடு , ஏனையோர் வீடுகளிலிருந்து பணிபுரியச் செய்ய வேண்டும். இதனை தீர்மானிப்பது நிறுவனப் பிரதானிகளின் கடமையாகும். இவ்வாறான நிறுவனங்களில் உள்ளக கூட்டங்கள் நடைபெறும் போது அதில் கலந்து கொள்ளும் ஊழியர்கள் எண்ணிக்கை 10 ஆக மட்டுப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.

நிதி நிறுவனங்கள்

வங்கிகள் , நிதி நிறுவனங்கள் மற்றும் அடகுவைக்கும் நிறுவனங்கள் திறந்திருக்கும். எனினும் இவற்றில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் 10 சேவை பெறுனர்கள் மாத்திரமே அனுமதிக்கப்பட வேண்டும். இயன்றவரை குறைந்தளவான பணியாளர்கள் சேவைக்கு அழைக்கப்பட வேண்டும்.

விவசாய , பெருந்தோட்டதுறை , நூலகங்கள் , உல்லாச விடுதிகள்

விவசாய , பெருந்தோட்டதுறையுடன் தொடர்புடைய தொழிற்சாலைகள் திறந்திருக்கும். ஆனால் இவற்றில் ஒரே நேரத்தில் 25 பேர் மாத்திரமே உணவு கொள்ள அனுமதிக்கப்பட வேண்டும்.

ஏனையவை

ஆடை தொழிற்சாலைகளை, திறந்த சந்தைகள் , பொருளாதார மத்திய நிலையங்கள் திறக்கப்பட்டிருக்கும். நடமாடும் அத்தியாவசிய சேவைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நடைபாதை வியாபாரிகளுக்கு சுகாதார விதிமுறைகளுக்கமைய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சில்லறை விற்பனை நிலையங்கள் சுகாதார வழிகாட்டல்களுக்கமைய திறக்கப்பட்டிருக்கும்.

பேக்கரிகள் திறக்கப்பட்டிருப்பதோடு ஒரே சந்தர்ப்பத்தில் மூவருக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்படும். பல்பொருள் அங்காடிகள் திறக்கப்பட்டிருப்பதோடு ஒரே நேரத்தில் 25 வீதமானோருக்கு மாத்திரமே அனுமதியளிக்க முடியும். ஏனைய விற்பனை நிலையங்களுக்கும் இந்த அடிப்படையில் இயங்க அனுமதி உண்டு.

வாகனங்கள் பழுது பார்க்கும் இடங்கள், தையல் கடைகள், புகைப்பட ஸ்டூடியோக்கள், ஆடை விற்பனை நிலையங்கள் திறக்கப்பட்டிருக்கும். கட்டட நிர்மான பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சிகை அலங்கார மற்றும் ஏனைய அலங்கார நிலையங்கள் சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளுக்கமைய திறக்கப்பட்டிருக்கும்.

நீதிமன்றம்

மேல் மாகாணத்திலுள்ள சகல நீதிமன்றங்களிலும் நீதிமன்ற செயற்பாடுகளின் போது 35 வீதமானோர் மாத்திரமே அனுமதிக்கப்பட முடியும். ஏனைய மாகாணங்களில் 50 வீதமானோருக்கு அனுமதி வழங்க முடியும்.

முதியோர் மற்றும் சிறுவர் இல்லங்கள், சிறைச்சாலைகள்

முதியோர் மற்றும் சிறுவர் இல்லங்கள், சிறைச்சாலைகளில் வெளிநபர்கள் சென்று அங்குள்ளவர்களை பார்வையிட தடை விதிக்கப்பட்டுள்ளது.

பரீட்சைகள் , விளையாட்டு போட்டிகள்

கல்வி அமைச்சினால் நாடளாவிய ரீதியில் நடத்தப்படும் பரீட்சைகள் தவிர்ந்த வேறு ஏதேனும் பரீட்சைகளை நடத்துவதாயின் அவற்றை சுகாதார விதிமுறைகளுக்கமைய நடத்த வேண்டும். விளையாட்டு போட்டிகள் தனியாக பயிற்சி பெறக் கூடியவற்றுக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நீச்சல் தடாகங்களை திறப்பதற்கு அனுமதியில்லை.

திருமணம் , மரண சடங்கு

திருமணத்தை நடத்துவது அனுமதியில்லை. எனினும் மணமகள் மற்றும் மணமகள் உள்ளிட்ட 10 பேருடன் பதிவு திருமணத்தை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கொவிட் மரணம் அல்லாத ஏனைய மரணங்களில் இறுதி சடங்குகள் 24 மணித்தியாலங்களுக்குள் 15 நபர்களுடன் மட்டுப்படுத்தப்பட்டதாக அமைய வேண்டும். ஏனைய எந்த வைபவங்களுக்கும் அனுமதி இல்லை.

வழிபாட்டு தளங்கள் , நூலகங்கள் , திரையரங்குகள்

பௌத்த விகாரைகள் , கோவில்கள், பள்ளிவாசல் மற்றும் தேவாலயங்களை திறக்க அனுமதியில்லை.

நூலகங்கள் திறக்கப்பட்டிருக்கும் , திரையரங்குகளை திறக்க அனுமதி வழங்கப்பட மாட்டாது.

சங்கீத நிகழ்வுகள் , உல்லாச விடுதிகள்

எந்த மாகாணத்திலும் சங்கீத நிகழ்வுகள் உள்ளிட்டவற்றை நடத்த அனுமதி வழங்கப்பட மாட்டாது. எனினும் சுகாதார விதிமுறைகளுடன் உல்லாச விடுதிகள் இயங்க முடியும்.

மதுபான விற்பனை நிலையங்கள் உள்ளிட்டவை

ஏனைய கலந்துரையாடல் கூட்டங்களுக்கு அனுமதி இல்லை. மதுபான விற்பனை நிலையங்கள் (பார்), சூதாட்ட இடங்கள், இரவு நேர களியாட்ட ஸ்தளங்களை திறக்க அனுமதியில்லை. எனினும் தொடுகை நிலையங்களையும் ஹோட்டல்களையும் திறக்க அனுமதியுண்டு.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மனைவியை தாக்கிய மருமகன்; தடுத்த மாமனாரை...

2025-02-18 18:34:47
news-image

கார் - மோட்டார் சைக்கிள் மோதி...

2025-02-18 18:14:41
news-image

மார்ச் 31 இன் பின் தேர்தலை...

2025-02-18 17:29:33
news-image

தாயுடன் உறங்கிக்கொண்டிருந்த ஒன்றரை மாதக் குழந்தை...

2025-02-18 18:37:48
news-image

தானம் செய்யும் பரோபகார சிந்தனை நாட்டின்...

2025-02-18 17:58:45
news-image

கொத்து, பிரைட் ரைஸ் உள்ளிட்ட உணவுப்...

2025-02-18 17:32:53
news-image

மது போதையில் அரச பாடசாலைக்குள் சென்ற...

2025-02-18 17:34:06
news-image

மின்சார சபையால் திடீர் மின்தடையை தடுப்பதற்கான...

2025-02-18 17:21:24
news-image

யாழில் டிப்பர் மோதி ஆணொருவர் பலி!

2025-02-18 17:19:54
news-image

காலச் சூழலுக்கேற்ப அரசியல் களம் மாறவேண்டியது...

2025-02-18 16:57:24
news-image

'சுத்தமான இலங்கை' திட்டத்தின் பயிற்சியாளர்களைப் பயிற்றுவிப்பதற்கான...

2025-02-18 17:30:11
news-image

வரட்சியான வானிலை ; நீர் விநியோகத்தில்...

2025-02-18 17:31:34