"சீன கம்யூனிஸ்டுகளாகிய நாம் செய்வதெல்லாம் சீனமக்களின் வாழ்வைச் சிறப்பானதாக்கி, சீன தேசத்தை புத்தெழுச்சி பெறச்செய்து மனித குலத்துக்காக சமாதானத்தையும் அபிவிருத்தியையும் மேம்படுத்துவதேயாகும்."
சீன கம்யூனிஸ்ட் கட்சி அதன் சொந்த மக்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதற்கு பாடுபடுகின்ற அதேவேளை, உலகின் பொதுவான அபிவிருத்தி மேம்படுத்துவதிலும் பற்றுறுதி கொண்டிருக்கிறது." சீன மக்கள் தங்களுக்கும் அதேவேளை ஏனைய நாடுகளில் உள்ள மக்களுக்கும் சிறப்பான வாழ்வுகிட்ட எதிர்பார்க்கிறார்கள்" என்று சி ஜின்பிங் தனது 2017 புத்தாண்டு உரையில் கூறியிருந்தார்.அந்த எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் உண்மையாகுவதற்கு அவர் சீன மக்களுக்கு தலைமைதாங்கி வழிநடத்துகிறார்.
ஒரு நூற்றாண்டு காலத்தில் கண்டிராத மாற்றங்களுக்கு உலகம் முகங்கொடுக்கின்ற நிலையில், சி ஜின்பிங் சீனாவை உண்மையான பல்தரப்பு தழுவிய அணுகுமுறையின் (Multilateralism ) உறுதியான சாம்பியனாக வழிநடத்துகிறார். தன்னிச்சையான ( Unilateralism)அணுகுமுறை மற்றும் பலவந்தப்படுத்தல் ( Bullying) போன்ற சவால்களுக்கு எதிராக சர்வதேச ஒழுங்கை சீனா பாதுகாக்கிறது.
உலகிற்கு என்ன நடந்துவிட்டது?அதற்கு எவ்வாறு முகங்கொடுப்பது? என்ற அடிப்படையான கேள்விகளுக்கு பதிலளிக்கையில் சி ஜின்பிங் சீனாவின் நிலைப்பாட்டை பின்வருமாறு முன்வைக்கிறார் . மனித குலத்துக்கான பொதுவான எதிர்காலத்துடன் கூடிய சமுதாயம் ஒன்றைக் கட்டியெழுப்புதல் என்ற கோட்பாடு சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியலமைப்பில் பொறுந்திருக்கிறது. அந்த கோட்பாடே உலகின் ஏனைய பகுதிகளுடனான சீனாவின் உறவாடலுக்கு வழிகாட்டியாக அமைந்திருக்கிறது.
பெய்ஜிங், (சின்ஹுவா ) " சீன கம்யூனிஸ்டுகளாகிய நாம் செய்யவேண்டியதெல்லாம் சீன மக்களின் வாழ்வை சிறப்பாக்கி, சீன தேசத்துக்கு புத்தெழுச்சியூட்டி, மனிதகுலம் முழுமைக்கும் சமாதானத்தையும் அபிவிருத்தியையும் மேம்படுத்துவதேயாகும்."
2017 ஆம் ஆண்டு 120 க்கும் அதிகமான நாடுகளைச் சேர்ந்த அரசியல் கட்சிகளின் 600 க்கும் அதிகமான பிரதிநிதிகள் கலந்துகொண்ட உயர்மட்ட கலந்துரையாடல் நிகழ்வொன்றில் உரையாற்றிய சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளரும் சீன ஜனாதிபதியுமான சி ஜின்பிங் இவ்வாறு பிரகடனம் செய்து உலகின் மிகப்பெரிய அரசியல் கட்சியின் வரலாற்றுப்பணியை விளக்கினார்.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மூலமுதல் அபிலாசைகள் மீது பற்றுதலைக் கொண்டவரான சி ஜின்பிங் சீனாவை ஒரு நவீன சோசலிஸ்ட் நாடாக கட்டியெழுப்புவதற்காக மாத்திரமல்ல, உலகிற்கு பொதுவான சிறப்பான எதிர்காலத்தை கட்டியெழுப்புவதற்காகவும் சீன கம்யூனிஸ்ட் கட்சியை வழிநடத்துகிறார்.
சகலருக்குமான அபிவிருத்தி
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உத்தியோகபூர்வ நூற்றாண்டு தினத்துக்கு ஒரு நாள் முன்னதாக உலக சுகாதார நிறுவனம் சீனாவை ( 70 வருடகால போராட்டத்துக்கு பிறகு ) மலேரியாவில் இருந்து விடுபட்ட நாடாக பிரகடனம் செய்தது. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் கீழ் சீனா நிகழ்த்திக்காட்டிய பெருவாரியான சாதனைகளில் இது பிந்திய ஒன்றாகும்.

140 கோடி சனத்தொகையைக் கொண்ட சீனா வறுமைக்கு எதிரான முற்றுமுழுதான வெற்றியை பெற்றுவிட்டதாக பெப்ரவரியில் சி ஜின்பிங் அறிவித்தார். இது மனிதகுலத்தின் வறுமைக்குறைப்பு வரலாற்றில் ஒரு அதிசயம் என்று பரவலாக புகழப்படுகிறது. சீன கம்யூனிஸ்ட் கட்சி அதன் சொந்த மக்களின் நல்வாழ்வை மேம்படுத்த பாடுபடுகின்ற அதேவேளை, உலகின் பொதுவான அபிவிருத்தி மேம்படுத்துவதிலும் பற்றுறுதி கொண்டு செயற்படுகிறது.2017 தனது புத்தாண்டுச் செய்தியில் சி ஜின்பிங், " சீன மக்கள் தங்களுக்கும் ஏனைய நாடுகளின் மக்களுக்கும் சிறப்பான வாழ்வு கிட்டவேண்டுமென்று எதிர்பார்க்கிறார்கள்." அந்த எதிர்பார்ப்பு உண்மையாவதற்காக அவர் சீனாவுக்கு தலைமை தாங்கிவருகிறார்.
மலேரியாவுக்கு எதிரான அல்லது வறுமைக்கு எதிரான போராட்த்தில் சீனா கடந்த பல தசாப்தங்களில் மற்றையவர்களுக்கு குறிப்பாக, வளர்ச்சியடைந்துவரும் நாடுகளுக்கு உதவிக்கரம் நீட்டியிருக்கிறது.
2000ஆம் ஆண்டளவில் தென்கிழக்கு சீனாவின் ஃ பூஜியான் மாகாணத்தின் ஆளுநராக இருந்தவேளை சி ஜின்பிங், பப்புவா நியூகினி நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு ஜங்காவோ(Juncao project) திட்டம் என்ற முன்னோடி திட்டமொன்றை ஆரம்பிக்க உதவினார். ஜங்காவோ என்பது " மந்திர புல்" ( Magic grass)என்று பெயர் பெற்றதாகும். சீன விஞ்ஞானிகளினால் கண்டுபிடிக்கப்பட்ட இந்த தாவரம் மரங்களுக்கு பதிலீடாக பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் ரீதியாக மிகவும் சினேகபூர்வமானதாகும். காளான்களை வளர்ப்பதற்கு பயன்படுத்தக்கூடியதாகும்.
18 வருடங்களுக்கு பிறகு சி ஜின்பிங் பப்புவா நியூகினிக்கு அரசுமுறை விஜயத்தை மேற்கொண்டபோது புல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் இன்னொரு உதவித்திட்டத்தில் கைச்சாத்திட்டார். 2023 ஆம் ஆண்டளவில் இந்த உதவித்திட்டம் அந்த நாட்டின் 30 ஆயிரம் மக்களை வறுமையின் பிடியில் இருந்து விடுவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று ஜங்காவோ திட்டம் 100 க்கும் அதிகமான நாடுகளில் வேர்விட்டு ஆபிரிக்கா, ஆசியா மற்றும் தென்பசுபிக் பிராந்தியத்தில் வளர்ச்சியடைந்துவரும் நாடுகளில் வறுமை ஒழிப்பு போராட்டத்துக்கு உதவி வருகிறது. அதேவேளை, பல தசாப்த கால கன்ரோன் சந்தையில் (Canton fair)இருந்து மூன்று வருடகால சீன சர்வதேச இறக்குமதி கண்காட்சி(China International Import Expo) மற்றும் புதிதாக தொடங்கப்பட்ட சீன சர்வதேச பாவனையாளர் உற்பத்திகள் கண்காட்சி வரை (China International Consumer Products Expo)பெரும் எடுப்பிலான சர்வதேச கண்காட்சிகள் (High end International Expos) பரந்தளவிலான திறந்த போக்கு (Opening up)மற்றும் பரஸ்பர பயன்கள் மீதான சீனாவின் பற்றுறுதியை திரும்பத்திரும்ப வெளிக்காட்டியிருக்கின்றன.
" அபிவிருத்தியைச் சாதிப்பதில் உலகிடமிருந்து சீனாவைப் பிரிக்கமுடியாது.அத்துடன் சுபீட்சத்தை அடைவதற்காக உலகிற்கும் சீனா தேவைப்படுகிறது " என்று வீடியோ இணைப்பின் மூலமாக பெய்ஜிங்கில் நடைபெற்ற ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் அரச தலைவர்கள் கவுன்சிலின் 20வது கூட்டத்தில் உரையாற்றிய சி ஜின்பிங் கூறினார்.
சமாதானத்துக்கான சக்தி
2015 மழைக்காலத்தில் ஐக்கிய நாடுகள் தலைமையகத்துக்கு விஜயம் செய்தபோது அதன் 70 வது வருட நிறைவுக்காக ( Sun of Peace) என்ற பரிசை சி ஜின்பிங் கொண்டுசென்றார். அது சீனாவின் பாரம்பரிய சுபகால வரைவடிவங்களால் அலங்கரிக்கப்பட்ட ஒரு சிவப்பு வெங்கல போத்தலாகும். அது சமாதானத்தின் மீதான நாட்டம், அபிவிருத்தி, ஒத்துழைப்பு மற்றும் எவருக்கும் பாதகமில்லாத விளைபயன்கள் ஆகியவற்றில் சீன மக்களுக்கு இருக்கும் அபிலாசையையும் நம்பிக்கையையும் காட்டுகிறது. அவையே ஐக்கிய நாடுகளின் சாசனத்தின் உணர்வகளாகவும் விளங்குகின்றன என்று சீன ஜனாதிபதி விளக்கினார்.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைத்துவத்தின் கீழ் சீனா இரண்டாவது நூற்றாண்டு இலக்கை நோக்கி பயணம் செய்கிறது. மகத்தான நவீன சோசலிஸ்ட் நாடொன்றைக் கட்டியெழுப்புவதே அந்த இலக்காகும். அவ்வாறு கட்டியெழுப்பப்படுகின்ற தேசம் மக்கள் சீனக்குடியரசின் நூற்றாண்டின்போது அதாவது 2049 ஆண்டளவில் சுபிட்சமும் பலமும் மிக்கதான ஒரு ஜனநாயக நாடாக, காலாசாரத்தில் மேம்பட்ட நாடாக, அமைதியும் வனப்பும் கொண்ட நாடாக விளங்கும்.
" சீனா என்ற சிங்கம் சிலிர்த்தெழும்பிவிட்டது. ஆனால், அது ஒரு இணக்கப்போக்குடைய நாகரிகமிக்க சிங்கமாகும்" என்று சீனாவுக்கும் பிரான்சுக்கும் இடையில் இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டு 50 வருடங்கள் நிறைவடைந்ததை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வைபவமொன்றில் சி ஜின்பிங் கூறினார். சமாதானத்தை நாடுவதும் மகிழ்ச்சியைத் தேடுவதும் உலகின் பொதுநலனுக்காக பங்களிப்பு செய்வதுமே சீனாவின் கனவாகும் என்று அவர் வலியுறுத்தினார்.
சீனா இன்று ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் பணிகளுக்கான பட்ஜெட்டுக்கு இரண்டாவது பெரிய பங்களிப்பு நாடாக விளங்குகிறது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் எந்தவொரு நிரந்தர உறுப்பு நாட்டையும் விட ஐ.நா.அமைதிப்படைக்கு கூடுதல் எண்ணிக்கையில் துருப்புக்களை சீனா அனுப்பியிருக்கிறது.
நாடுகள் சிறியவையோ பெரியவையோ, பலம்பாருந்தியவையோ பலவீனமானவையோ, செல்வச்செழிப்புடையவையோ வறியவையோ அவை சகலதுமே சமாதானத்தைப் பேணிக்காத்து மேம்படுத்துவதற்கு பங்களிப்பைச் செய்யவேண்டும் என்று சி ஜின்பிங் சீன ஜனாதிபதி என்ற வகையில் முதன்முதலில் சீனாவில் நடத்திய பல்தரப்பு இராஜதந்திர நிகழ்வான ஆசிய வருடாந்த மகாநாட்டுக்கான போவாவோ அரங்கின் (ஏப்ரில் 2013) தொடக்க கூட்டத்தில் கூறினார்.
ஒரு நூற்றாண்டில் கண்டிராத மாற்றங்களுக்கு உலகம் முகங்கொடுத்துக்கொண்டிருக்கும் நிலையில், தன்னிச்சையான போக்கு மற்றும் பலவந்தப்படுத்தல் போன்ற சவால்களுக்கு எதிராக சர்வதேச ஒழுங்கைப் பாதுகாத்து அந்த ஒழுங்கின் உண்மையான ஒரு சாம்பியனாக வருவதற்கு சி ஜின்பிங் சீனாவை வழிநடத்தியிருக்கிறார்.
ஒன்றுமாறி ஒன்றாக அடுத்தடுத்து உலகளாவிய சவாலுக்கு முகங்கொடுத்துக்கொண்டிருக்கும் நிலையில், பல்தரப்பு ஒத்துழைப்பை பலப்படுத்துவதைத் தவிர, உலக நாடுகளுக்கு வேறு சிறந்த தரிவு கிடையாது என்று 2018 நவம்பரில் புவனஸ் அயர்ஸில் நடைபெற்ற ஜி 20 உச்சிமகாநாட்டுக்கு சென்றவேளை சீன ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம அன்ரோனியோ குற்றெரஸிடம் கூறினார்.
மனிதகுலத்துக்கு பொதுவான எதிர்காலம்
மனிதகுலம் முக்கியமான அபிவிருத்தி மற்றும் பரந்தளவிலான மாற்றங்கள், நிலைமாற்றங்கள் நிகழ்கின்ற ஒரு யுகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறது. பெருவாரியான சவால்கள் மற்றும் அதிகரித்த ஆபத்துகளும் நிறைந்தது இந்த யுகம் என்று 2017 ஆம் ஆண்டு ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் அலுவலகத்தில் நிகழ்த்திய முக்கிய உரையில் சீன ஜனாதிபதி கூறினார்.
உலகிற்கு நடந்தது என்ன? அதற்கு எவ்வாறு முகங்கொடுப்பது ? என்ற அடிப்படைக் கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் உரையாற்றிய ஜனாதிபதி, சீனாவின் நிலைப்பாட்டை பின்வருமாறு விளக்கினார் . முழு மனிதகுலத்துக்கும் பொதுவான எதிர்காலத்துடனான சமுதாயம் ஒன்றைக் கட்டியெழுப்புவது என்பது சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியலமைப்பில் பொதிந்துள்ள ஒரு கோட்பாடாகும். உலகின் ஏனைய பகுதிகளுடனான சீனாவின் உறவாடலை வழிநடத்தும் கோட்பாடாகவும் இது இருந்துவருகிறது.
முன்னென்றுமில்லாத வகையிலான கொவிட் -19 பெருந்தொற்று அச்சுறுத்தலுக்கு உலகம் முகங்கொடுத்துக்கொண்டிருக்கும் நிலையில், உலகின் மிகப்பெரிய அபிவிருத்தியடைந்துவரும் நாடான சீனா அந்த நோயை பயனுறுதியுடைய முறையில் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்திருக்கிறது. அதேவேளை, கொவிட்டை கட்டுப்படுத்துவதில் ஏனைய நாடுகளுக்கு உதவுவதில் சீனா தன்னாலியன்ற சகல முயற்சிகளையும் மேற்கொள்கிறது.
சீன கொவிட் 19 தடுப்பூசிகள் தாராளமாக சீனாவிடம் கையிருப்பில் உள்ள போதில் எல்லாம் அவை உலகின் பொதுநன்மைக்காக பகிரப்படும் என்று 2020 ஆம் ஆண்டு சி ஜின்பிங் உறுதியளித்தார். இப்போது இறுக்கமான விநியோகம் மற்றும் உள்நாட்டில் பாரிய தேவை இருக்கின்ற நிலையிலும் சீனா சர்வதேச சமூகத்துக்கு 45 கோடிக்கும் அதிகமான டோஸ்கள் கொவிட் தடுப்பூசிகளை வழங்கியிருக்கிறது. அத்துடன் உலகம் பூராவும் தடுப்பூசிகள் கட்டுப்பாடியாகக்கூடிய முறையிலும் எளிதாகக்கிடைக்கக் கூடியதாகும் இருப்பதை உறுதிசெய்வதற்கு சீனா தொடர்ந்து உதவிக்கொண்டிருக்கிறது.
மனித குலத்துக்கு பொதுவான ஒரு எதிர்காலத்துடனான சமுதாயத்தை கட்டியெழுப்பும் சி ஜின்பிங்கின் நோக்கு உலகளாவிய சவால்களுக்கு புதியதொரு தீர்வைத் தருவது மாத்திரமல்ல, உலக நாகரிகங்கள் மீது புதியதொரு அணுகுமுறையையும் பாய்ச்சுகிறது.
மேற்குலகில் நாகரிகங்களுக்கிடையில் மோதல் அல்லது ஒரு நாகரீகத்தை விடவும் மற்றைய நாகரீகம் மேலானது என்ற கதை அளப்புகள் இடம்பெறுகின்ற அதேவேளை, சீன ஜனாதிபதியின் பார்வையில் ஒரு நாகரீகத்தின் வளர்ச்சி என்பது நாகரீகங்களுக்கிடையிலான பரிமாற்றங்கள் மற்றும் பரஸ்பர போதனைகள் மூலமே நிலைநிறுத்தப்படுகிறது.
உலகின் எதிர்காலத்துக்கான வழியில்தான் சீனாவின் இலக்கை அடைய சீன கம்யூனிஸ்ட் கட்சியை சி ஜின்பிங் தலைமைதாங்கி வழிநடத்திவருகிறார். திறந்த, சகல தரப்பையும் அரவணைத்த, தூய்மையான,அழகான உலகொன்றை - நிலைபேறான அமைதி, சமாதானத்தை, உலகளாவிய பாதுகாப்பு மற்றும் எல்லோருக்கும் பொதுவான சுபிட்சம் ஆகியவற்றை அனுபவிக்கின்ற உலகை உருவாக்குவதே அந்த இலக்காகும்.
" நாடுகளுக்கிடையில் வேறுபாடுகள் இருக்கக்கூடும். அவற்றுக்கிடையே பிரச்சினைகளும் மூளலாம். ஆனால், ஒன்றை மாத்திரம் நாம் மறந்துவிடக்கூடாது. அதாவது நாம் ஒரே வானத்தின் கீழ் ஒரே பூமியை எமது இல்லமாக பகிர்ந்துகொண்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக வாழ்கிறோம்" என்று சி ஜின்பிங் கூறுகிறார்.













கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM