யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பகுதியில் அண்மையில் இடம்பெற்ற பதிவு திருமணத்தில் கலந்து கொண்ட பெண்ணொருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 

ஊர்காவற்துறை பருத்தியடைப்பு பகுதியை சேர்ந்த பெண்ணொருவருக்கு நேற்றைய தினம் திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டதையடுத்து ஊர்காவற்துறை வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக சென்று இருந்தார். 

அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட  அன்டிஜன்  பரிசோதனையில் தொற்று உறுதியாகியுள்ளது. அதனையடுத்து அவருடன் தொடர்புடையவர்கள் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்த போது , குறித்த பெண்ணின் வீட்டிற்கு அருகில் அண்மையில் இடம்பெற்ற பதிவு திருமண நிகழ்வில் கலந்து கொண்டிருந்தமையும் தெரியவந்துள்ளது.

அதனை அடுத்து பதிவு திருமண நிகழ்வில் கலந்து கொண்டவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கைகளை சுகாதார பிரிவினர் முன்னெடுத்துள்ளமையும் குறிப்பிடதக்கது.