56 ஆயிரம் மெட்ரிக்தொன் இரசாயன உரத்தை இறக்குமதி செய்ய தீர்மானம் : அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டுமென்கிறார் ஹர்ஷ டி சில்வா

By T Yuwaraj

04 Jul, 2021 | 08:21 PM
image

(எம்.மனோசித்ரா)

அரசாங்கத்தினால் கடந்த மே மாதம் 6 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் இரசாயன உரத்தை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனினும் 56 000 மெட்ரிக்தொன் இரசாயன உரத்தினை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பில் அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

சுவாரஸ்யமாகவுள்ள 9 ஆவது பாராளுமன்ற புதிய நிலைவரங்கள் - ஹர்ஷ டி சில்வா |  Virakesari.lk

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

56 000 மெட்ரிக்தொன் இரசாயன உரத்தினை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் மே மாதம் 6 ஆம் திகதி உரம் தொடர்பில் வெளியியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில் இரசாயன உரம் இறக்குமதி செய்யப்படக் கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வாறெனில் இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் குறித்து அரசாங்கம் உடனடியாக தெளிவுபடுத்த வேண்டும். காரணம் அரசாங்கத்தால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில் இரசாயன உரத்தை இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனவே இந்த வர்த்தமானி அறிவித்தல் இரத்து செய்யப்படுமா ? இரத்து செய்யவில்லை என்றால் அதற்கு புறம்பாக உரத்தை இறக்குமதி செய்வது சட்ட ரீதியான பாதிப்பை ஏற்படுத்தாதா? அவ்வாறில்லை எனில் வேறு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படுமா? என்பவை தொடர்பில் தெளிவுபடுத்துமாறு பொறுப்புள்ள மக்களுக்கான எதிர்க்கட்சி என்ற ரீதியில் கேட்டுக் கொள்கின்றோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஓமான் தூதரக அதிகாரி கொழும்பு விமானநிலையத்தில்...

2022-11-29 05:48:09
news-image

அனைத்து இன மக்களையும் ஒன்றிணைக்கும் கொள்கை...

2022-11-28 16:51:42
news-image

அரசியல் மயமாகியுள்ள வெளிவிவகார அமைச்சை மறுசீரமைக்க...

2022-11-28 21:09:30
news-image

ஊடகத்தை அச்சுறுத்தி எந்த நெருக்கடிக்கும் தீர்வுகாண...

2022-11-28 16:08:41
news-image

யுத்தம் வெற்றி கொள்ளப்பட்டாலும் நாட்டில் சமாதானம்...

2022-11-28 15:13:06
news-image

இனப் பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதாக ஜனாதிபதி...

2022-11-28 17:19:07
news-image

அரச நிதி தொடர்பான முகாமைத்துவ சட்டத்தை...

2022-11-28 13:30:34
news-image

வியட்நாமில் உயிரிழந்த இலங்கையரின் சடலத்தை அங்கேயே...

2022-11-28 21:08:04
news-image

பால் மாவின் விலை அதிகரிக்கிறது!

2022-11-28 21:00:39
news-image

மனித உரிமை ஆணைக்குழுவுடன் மோதி நாட்டை...

2022-11-28 17:04:25
news-image

சமூக ஊடகங்கள் ஊடக நெறியாக்கத்திற்கமைய செயற்படுகிறதா...

2022-11-28 12:40:38
news-image

2023 ஆம் ஆண்டில் கல்விப் பொதுத்...

2022-11-28 19:57:39