பிலிப்பைன்ஸ் விமான விபத்து ; 17 பேர் பலி, 40 பேர் மீட்பு

By Vishnu

04 Jul, 2021 | 12:29 PM
image

பிலிப்பைன்ஸின் தெற்குப் பகுதியில் இராணுவத்தினரை ஏற்றிச் சென்ற விமானப் படை விமானம் விபத்துக்குள்ளானதில் குறைந்தது 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் இதுவரை 40 பேர் மீட்கப்பட்டுள்ளதாக பிலிப்பைன்ஸ் பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார்.

மீட்பு முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவித்த பாதுகாப்பு செயலாளர் டெல்ஃபின் லோரென்சானா, இந்த விமானத்தில் மூன்று விமானிகள் மற்றும் 84 இராணுவத்தினர் உள்ளடங்கலாக 92 பேர் இருந்ததாகவும் அவர் உறுதிபடுத்தினார்.

சி -130 என்ற குறித்த விமானம், தலைநகர் மணிலாவிற்கு தெற்கே 1,000 கி.மீ (621 மைல்) தொலைவில் உள்ள ஜோலோ தீவில் தரையிறங்க முயன்றபோது விபத்துக்குள்ளானது. 

காயமடைந்தவர்களை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் உறுதிபடுத்தியுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொவிட் ஊரடங்கிற்கு எதிராக சீனாவில் போராட்டம்...

2022-11-28 09:59:28
news-image

கெமரூனில் மண்சரிவு : 14 பேர்...

2022-11-28 08:45:21
news-image

அல்ஜீரியாவில் ஓவியா் படுகொலை : 49...

2022-11-27 15:31:23
news-image

50 கோடி வாட்ஸ் - அப்...

2022-11-27 16:35:21
news-image

இத்தாலியில் மண்சரிவு : 8 பேர்...

2022-11-27 12:27:28
news-image

உலக அமைதிக்காக வட கொரியாவுடன் இணைந்து...

2022-11-26 18:40:02
news-image

தமிழீழம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை இந்தியா மேற்கொள்ள...

2022-11-26 15:04:52
news-image

ஐஎஸ் அமைப்பை சேர்ந்த நீல் பிரகாசை...

2022-11-26 13:18:19
news-image

6 பேர் விடுதலையை எதிர்த்து மறுசீராய்வு...

2022-11-26 13:18:26
news-image

ஓரியன் விண்கலம் வெற்றிகரமாக நிலவின் சுற்றுப்பாதையில்...

2022-11-26 11:48:29
news-image

மின்வெட்டால் உக்ரேனில் 60 இலட்சத்திற்கும் அதிகமான...

2022-11-26 10:08:29
news-image

மும்பைபயங்கரவாத தாக்குதலுக்கு 14 வருடங்கள்

2022-11-26 09:50:46