டி.ஏ. ராஜபக்ஷ ஞாபகார்த்த கோபுரம் மற்றும் நூதனசாலை நிர்மாண விவகாரம்: கோட்டாபய விடுவிக்கப்பட்டிருந்த வழக்கில் ஏனையோரும் விடுதலை

Published By: J.G.Stephan

03 Jul, 2021 | 03:06 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)
டி.ஏ. ராஜபக்ஷ  ஞாபகார்த்த  கோபுரம் மற்றும் நூதனசாலை நிர்மாண பணிகளுக்காக இலங்கை காணி மீட்பு மற்றும் அபிவிருத்தி கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான 33.9 மில்லியன் ரூபா பணத்தை நம்பிக்கை மோசடி செய்தமை தொடர்பில் தொடரப்பட்டுள்ள வழக்கிலிருந்து  6 பிரதிவாதிகளும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இவ்வழக்கில் ஏற்கனவே கடந்த 2019 நவம்பர் 21 ஆம் திகதி முன்னாள் பாதுகாப்பு செயலரும், இலங்கையின் தற்போதைய ஜனாதிபதியுமான கோட்டாபய ராஜபக்ஷ விடுவிக்கப்பட்டிருந்த நிலையிலேயே நேற்று ஏனைய பிரதிவதிகளான 6 பேரும் விடுவிக்கப்பட்டனர்.

முதலாவது நிரந்தர விசேட மேல் நீதிமன்றம் இதற்கான உத்தரவை நேற்று பிறப்பித்தது. அத்துடன்  விடுவிக்கப்பட்ட 6 பேரும் வெளிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடையையும் நீதிமன்றம் நீக்கியதுடன், நீதிமன்றத்தின் பொறுப்பிலிருக்கும் அவர்களது கடவுச்சீட்டுக்களை கையளிக்குமாறும் மேல்நீதிமன்ற பதிவாளருக்கு  நிரந்தர விசேட மேல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

நேற்று முற்பகல் குறித்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இதன்போது இலங்கை காணி மீட்பு மற்றும் அபிவிருத்தி கூட்டுத்தாபனம் சார்பில் மன்றில் ஆஜரான சட்டத்தரணி கபில லியனகம, வழக்குத்தொடர்புடைய திட்டம் தொடர்பில் மீளப் பெறப்படவேண்டிய  3 கோடியே 39 இலட்சத்து 44 ஆயிரத்து 741 ரூபா 60 சதம் (33,944,741.60) பணமானது, கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை 13 ஆம் திகதி டீ.ஏ. ராஜபக்ஷ ஞாபகார்த்த மன்றம் ஊடாக செலுத்தி முடிக்கப்பட்டுள்ளதாக, இலங்கை காணி மீட்பு மற்றும் அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின் உள்ளக  விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது என தெரிவித்தார்.

இந்நிலையில், இந்த வழக்குடன் தொடர்புடைய பணம், ராஜபக்ஷ ஞாபகார்த்த மன்றம் ஊடாக செலுத்தி முடிக்கப்பட்டுள்ளதாக குறித்த கூட்டுத்தாபனமே சட்ட மா அதிபரை தெளிவுபடுத்தியுள்ள நிலையில்,  வழக்கின் பிரதிவாதிகளுக்கு எதிராக தொடர்ந்தும் வழக்கினை குற்றவியல் நடைமுறை சட்டக் கோவையின் 194 (1) ஆம் அத்தியாயத்தின் பிரகாரம் முன்கொண்டு செல்ல உத்தேசம் இல்லை என முறைப்பாட்டாளரான சட்ட மா அதிபர் சார்பில் மன்றில் பிரசன்னமான பிரதி சொலிசிட்டர் ஜெனரால் திலீப பீரிஸ் மன்றில் குறிப்பிட்டார்.

இதன்போது பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான  ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா உள்ளிட்ட சட்டத்தரணிகள், அப்படியானால் பிரதிவாதிகளை விடுதலைச் செய்யுமாறு மன்றைக் கோரினர்.

 இந்நிலையிலேயே விடயங்கள் அனைத்தையும் ஆராய்ந்த நீதிமன்றம் பிரதிவாதிகளை விடுதலை செய்து உத்தரவிட்டது.

காணி மீட்பு மற்றும் அபிவிருத்தி கூட்டுத்தாபன முன்னாள் தலைவர் லியன ஆரச்சிகே பிரசாத் ஹர்ஷான் டி சில்வா,  அக்கூட்டுத்தாபண பணிப்பாளர் சபை உறுப்பினர்களுமே விடுவிக்கப்பட்ட பிரதிவாதிகளாவர்.

முன்னதாக கடந்த 2019 நவம்பர் 21 ஆம் திகதி, வழக்குத் தொடுநர் சட்ட மா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரால் திலீப பீரிஸ், ' அரசியலமைப்பின் 35 (1) ஆம் உறுப்புரைக்கு அமைய ஜனாதிபதிக்கு எதிராக குற்றவியல், சிவில் வழக்குகளை அவர் பதவியில் உள்ள காலப்பகுதியில் முன்னெடுத்துச் செல்ல முடியாது.  எனவே  முதலாம் பிரதிவாதியான கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கை நிறைவுறுத்தி அவரை  வழக்கிலிருந்து விடுவிக்குமாறு கோருகின்றேன்.' என  சட்ட மா அதிபரின் நிலைப்பாட்டை மன்றுக்கு அறிவித்ததையடுத்து விஷேட மேல் நீதிமன்றால், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இவ்வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டு, அவரது கடவுச் சீட்டை அவரிடம் ஒப்படைக்கவும் உத்தரவிடப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:01:57
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43