(செ.தேன்மொழி)
மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் போலி ஆவணங்களை பயன்படுத்தி வவுனியாவிலிருந்து கொழும்புக்கு வருவதற்கு முயற்சித்த பேரூந்து, பொலிஸாரால் இனங்காணப்பட்டுள்ளதோடு , அதன் சாரதி மற்றும் நடத்துனர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி வந்த பஸ் ஒன்று மதவாச்சி பகுதியில் பொலிஸாரால் இனங்காணப்பட்டுள்ளது. குறித்த பேரூந்து சாரதி மற்றும் நடத்துனர் போலி ஆணவனங்களை காண்பித்து இவ்வாறு வருவதற்கு முயற்சித்துள்ள நிலையிலேயே கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து கட்டுப்பாடுகளை மீறி செல்ல முற்படும் நபர்கள் தொடர்பில் தொடர்ந்தும் கண்காணிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதுடன் அத்தகைய நபர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும். இதே வேளை தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு புறம்பாக மேல்மாகாணத்தை கடக்க முற்பட்ட 174 பேர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM