300 மில்லியன் ரூபா நிதி ஒதுகீட்டில் மட்டக்களப்பில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை

Published By: Gayathri

03 Jul, 2021 | 12:00 PM
image

மட்டக்களப்பு  மாவட்டத்தின் பின்தங்கிய பிரதேசங்களை சேர்ந்த வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு இந்திய அரசின் உதவியுடன் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

குறித்த வேலைத்திட்டத்தில்  முதற்கட்டமாக சுகாதார வசதிகளை மேன்படுத்த இந்திய உயர் ஸ்தானிகராலயத்தில் இராஜாங்க அமைச்சர் விடுத்த வேண்டுகோளின் விளைவாக, இந்திய அரசின் நிதி உதவியுடன் பின்தங்கிய பிரதேச உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பமாகவுள்ளது.

இதில் 3000 க்கும் மேற்பட்ட கழிவறைகள் மட்டக்களப்பு  மாவட்டத்தின் பின்தங்கிய பிரதேசங்களை சேர்ந்த வருமானம்  குறைந்த  குடும்பங்களுக்கு அமைத்து கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

பின்தங்கிய கிராமிய பிரதேசஅபிவிருத்தி  இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் அமைச்சில் இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் அரசியல் துறை முதன்மை செயலாளர் திருமதி பாணு அம்மையார் மற்றும்  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இணைப்புச்செயலாளர் செந்தில் தொண்டமான் ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற கலந்துரையாடல்  ஒன்றில் இதனை தெரிவித்தார். 

மேலும் மட்டக்களப்பு  மாவட்டத்தின் பின்தங்கிய பிரதேசங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும்  இத்திட்டமானது  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வழிகாட்டலின் கீழ் முன்னெடுக்கப்பட உள்ளது. 

இதற்காக இலங்கை அரசு தனது முழு ஆதரவையும் வழங்கும் என இராஜாங்க அமைச்சர் இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் அரசியல் துறை முதன்மை செயலாளரிடம் தெரிவித்தார்.

பின்தங்கிய பிரதேச உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் திட்டத்துக்கு  300 மில்லியன் ரூபா நிதி ஒதுகீடு செய்யப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கது என்பதுடன் இத்திட்டத்தினூடாக மட்டக்களப்பு மாவட்டத்தின் பின்தங்கிய பிரதேசங்களின்  அடிப்படை சுகாதார வசதிகளை மேன்படுத்த முடியும் என பின்தங்கிய கிராமிய பிரதேசஅபிவிருத்தி  இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன்  தெரிவித்தார்.

அமைச்சரின் ஊடக பிரிவு 

இரா.சுரேஸ்குமார் -0714551010  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31
news-image

பலஸ்தீன சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு கொழும்பில்...

2024-04-17 18:42:21