ஜப்பானில் இடம்பெற்ற நிலச்சரிவில் சிக்கி சுமார் 20 க்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயுள்ளனர்.

குறித்த நிலச்சரிவு இன்று சனிக்கிழமை இடம்பெற்றுள்ளதாக ஜப்பானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஜப்பானின் அட்டமி நகர் பகுதியில் பெய்துவரும் கடும் மழையையடுத்து குறித்த பகுதியில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த நிலச்சரிவில் சிக்கி சுமார் 20 க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்.

இவ்வாறு காணாமல் போனோரை தேடும் நடவடிக்கையில் மீட்புப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.