(எம்.மனோசித்ரா)
இலங்கையில் தங்கியுள்ள வெளிநாட்டவர்கள் இடம்பெயர்வு கொடுப்பனவின் கீழ் தமது சொந்த நாடுகளுக்கு பணம் அனுப்புவதை மட்டுப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நிதி அமைச்சர் என்ற வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் கையெழுத்துடன் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த வர்த்தமானி அறிவித்தலுக்கமைய இலங்கையில்  தங்கியுள்ள வெளிநாட்டு பிரஜை ஒருவர் வெளிநாட்டிலுள்ள தமது குடும்ப உறுப்பினருக்கு அனுப்பும் பணத்தை இடப்பெயர்வு கொடுப்பனவின் கீழ் அனுப்புவதை மட்டுப்படுத்துதல் உள்ளிட்ட 9 விடயங்கள் இந்த விசேட வர்த்தமானி அறிவித்தலில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இந்த வர்த்தமானி அறிவித்தலில் கூறப்பட்டுள்ள விடயங்கள் நேற்று வெள்ளிக்கிழமை முதல் அடுத்த 6 மாதங்களுக்கு செல்லுபடியாகும் அறிவிக்கப்பட்டுள்ளது.