(எம்.மனோசித்ரா)

மேல் மாகாணத்தில் 30 வயதுக்கு மேற்பட்ட சகலருக்கும் இம்மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் தடுப்பூசிகளை வழங்குமாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ சுகாதார தரப்பினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

முறையான திட்டமிடலுடன் செப்டெம்பர் மாதத்திற்குள் நாட்டிலுள்ள சகல பிரதேசங்களிலும் பெருமளவானோருக்கு தடுப்பூசி வழங்கப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

No description available.

தடுப்பூசி வழங்கல் மற்றும் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பான கொவிட் ஒழிப்பு விசேட குழுவுடன் நேற்று வெள்ளிக்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதுவரையில் கொழும்பு மாவட்டத்தில் இந்த வயது பிரிவினரில் 60 சதவீதமானோருக்கும் , கம்பஹா மாவட்டத்தில் 47 சதவீதமானோருக்கும் , களுத்துறை மாவட்டத்தில் 34 சதவீதமானோருக்கும் முதற்கட்ட தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

No description available.

இரண்டாம் கட்டமாக வழங்குவதற்கு தேவையாகவுள்ள அஸ்ட்ரசெனிகா தடுப்பூசிகள் விரைவில் கிடைக்கப் பெறும் என்று நம்புவதாக ஜனாதிபதி இதன் போது தெரிவித்தார். அதற்கமைய அஸ்ட்ரசெனிகா தடுப்பூசி பெற்றுக்கொண்ட சகலருக்கும் இரண்டாம் கட்ட தடுப்பூசியை வழங்குவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்குமாறும் ஜனாதிபதி இதன் போது தெரிவித்தார்.

அஸ்ட்ரசெனிகா தடுப்பூசியை முதற்கட்டமாக பெற்று 45 வாரங்களின் பின்னர் இரண்டாம் கட்ட தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளவதில் சிக்கல் இல்லை என்று உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளதாக , கலந்துரையாடலில் பங்குபற்றியிருந்த விசேட வைத்திய நிபுணர் பிரசன்ன குணசேன தெரிவித்தார்.