தீ விபத்திற்குள்ளான பேர்ள் கப்பலை சூழவுள்ள 3 சதுர மைல் பரப்பிற்குள் சிதைவுகள்

Published By: Digital Desk 4

02 Jul, 2021 | 04:38 PM
image

(எம்.மனோசித்ரா)

இலங்கை கடற்பரப்பில் தீவிபத்திற்குள்ளான எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் மூலம் கொழும்புக்கு அப்பாலுள்ள கடற்பரப்பில் ஏற்பட்டிருக்கும் தாக்கங்களை கணிப்பிடுவதற்கு கடந்த மாதம் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த இந்திய கடற்படையின் ஆய்வு கப்பலான சர்வேக்ஷாக் அதன் ஒருகட்ட சோதனையை நிறைவு செய்துள்ளது.

எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் இலங்கை பிரதிநிதியை கைதுசெய்ய பரிந்துரை |  Virakesari.lk

அதற்கமைய எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பலை சூழ்ந்துள்ள பகுதிகளில் ஆய்வுப்பணிகளில் ஈடுபட்டிருந்த இந்திய கடற்படைக் கப்பலான சர்வேக்‌ஷாக் 558 மைல்கள் சைட் ஸ்கான் சோனர் சோதனையை நிறைவு செய்துள்ளதாக கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

சிதைவடைந்த கப்பலை சூழவுள்ள மூன்று சதுர மைல் பரப்பிற்குள் சிதைவுகள் காணப்படுவதாக இப்பகுப்பாய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. 

ஒருங்கிணைக்கப்பட்ட சென்சர்கள் மற்றும் இரு ஆய்வுப் படகுகள் மூலம் மூன்று பகுதிகளில் ஒரே நேரத்தில் ஆய்வுகள் முன்னெடுக்க்கப்படுவதாக இந்திய உயர் ஸ்தானிகராலயம் அதன் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

இந்திய கடற்படையின் ஆய்வு கப்பலான சர்வேக்ஷாக் கடந்த ஜூன் 24 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

கொழும்பு துறைமுகத்துக்கு அப்பால் உள்ள கடற்பரப்பில் கடற்பயணங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக இலங்கை அரசாங்கத்தினால் விடுக்கப்பட்டிருந்த உத்தியோகபூர்வமான கோரிக்கையின் அடிப்படையில் ஐ.என்.எஸ் சர்வேக்ஷாக் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

தேசிய நீரியல் வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி அமைப்பு (நாரா), இலங்கை கடற்படை மற்றும் இந்திய கடற்படை ஆகியவற்றின் ஒன்றிணைவில் இந்த கூட்டு ஆய்வுப்பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. 

ஒபரேஷன்சாகர் ஆரக்‌ஷா 2 இன் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் இக்கூட்டு நடவடிக்கை இப்பிராந்தியத்தில் பாதுகாப்பான கடற்பயணத்துக்கு உறுதுணையாக இருக்கும் அதேநேரம், இந்து சமுத்திர பிராந்தியத்தில் ஏற்படும் இதுபோன்ற அனர்த்தங்களை தணிப்பதற்கு விரைந்து ஆதரவினை வழங்குவதற்கான இந்தியாவின் அயலவர்களுக்கு முதலிடம் கொள்கையை மேலும் வலுப்படுத்துவதாகவும் அமைவதாகவும் இந்திய உயர்ஸ்தானிகராலயம் மேலும் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08