2 ஆவது அத்தியாயத்தில் இலங்கைக்கு 13 போட்டிகள்

Published By: Gayathri

02 Jul, 2021 | 12:27 PM
image

(எம்.எம்.சில்வெஸ்டர்)

ஐ.சி.சி. உலக டெஸ்ட் வல்லவர் போட்டியின் இரண்டாவது அத்தியாயம் (2021 - 2023) எதிர்வரும்  ஒகஸ்ட் மாதம் முதல் ஆரம்பமாகவுள்ளது.

இந்த இரண்டாவது அத்தியாயத்தில் இலங்கைக்கு 13 போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கவுள்ளது. 

ஐ.சி.சி. உலக டெஸ்ட் வல்லவர் போட்டியின் முதல் அத்தியாயம் கடந்த மாதம் நிறைவுக்கு வந்ததுடன், விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியினரை வீழ்த்திய கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து கிரிக்கெட் அணியினர் உலக டெஸ்ட் வல்லவர்களாக முடிசூடிக்கொண்டனர். 

இந்த முதலாவது உலக டெஸ்ட் வல்லவர் தொடரில், இலங்கை  கிரிக்‍கெட் அணி 12  போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் மாத்திமே வெற்றியீட்டியிருந்தது.

மேலும், 6 போட்டிகளில் தோல்வியைத் தழுவியிருந்ததுடன் 4 போட்டிகளை வெற்றி தோல்வியின்றி முடித்திருந்தது. இதன்படி புள்ளிகள் பட்டியலில் இலங்கைக்கு 7ஆவது இடமே கிடைத்தது.

முதலாவது அத்தியாயத்தில் இலங்கைக்கு இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுடன் விளையாடும் வாய்ப்பு கிடைத்திருக்காதபோதும், இரண்டாவது அத்தியாயத்தில் குறித்த இரண்டு அணிகளுடன் விளையாடும் வாய்ப்பு கிடைக்கவுள்ளது.

இதன்படி இந்தியாவுடன் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் அவுஸ்திரேலியாவுடன் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் இலங்கை அணி விளையாடவுள்ளது. 

மேலும், நடப்புச் சம்பியனான நியூஸிலாந்து, பங்களாதேஷ், மேற்கிந்தியத் தீவுகள், பாகிஸ்தான் ஆகிய அணிகளுடன் தலா 2 போட்டிகள் கொண்ட தொடரில் இலங்கை அணி பங்கேற்கவுள்ளது.

இதில் இங்கிலாந்து மற்றும் தென் ஆபிரிக்க அணிகளுடன் இலங்கைக்கு போட்டிகள் அட்டவணைப்படுத்தப்படவில்லை.  

இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள் விளையாடும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின்போது உலக டெஸ்ட் வல்லவர் போட்டியின் இரண்டாவது அத்தியாயம் ஆரம்பமாகவுள்ளது. 

இரண்டாவது அத்தியாயத்தில் 21 போட்டிகளில் பங்கேற்கவுள்ள இங்கிலாந்து ஆகக்கூடுதலான போட்டிகளில் விளையாடவுள்ளது.

இந்தியா 19 போட்டிகளிலும், அவுஸ்திரேலியா 18 போட்டிகளிலும், தென் ஆபிரிக்கா 15 போட்டிகளிலும், பாகிஸ்தான், நியூஸிலாந்து தலா 14 போட்டிகளிலும், இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள் தலா 13 போட்டிகளில் விளையாடவுள்ளன. 

12 போட்டிகளில் பங்கேற்கும் பங்களாதேஷ்  இத்தொடரில் மிகக் குறைவான போட்டிகளில் விளையாடும் அணியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகலடைந்த மும்பை...

2024-04-19 02:08:17
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49