கொவிட்-19 அச்சம் காரணமாக இலங்கை உட்பட 13 நாடுகளுக்கான பயணத் தடையினை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வியாழனன்று அறிவித்துள்ளதாக அந் நாட்டு அரச செய்தி நிறுவனம் (WAM) தெரிவித்துள்ளது.

இந்தியா, பங்களாதேஷ், நேபாளம், இலங்கை, வியட்நாம், நமீபியா, சாம்பியா, காங்கோ, உகாண்டா, சியரா லியோன், லைபீரியா, தென்னாபிரிக்கா மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகளுக்கே இவ்வாறு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம், பயணப் பருவத்தின் தொடக்கத்துடன், குடிமக்கள் கொவிட்-19 தொடர்பான அனைத்து முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளுக்கும் இணங்க வேண்டும் என்று ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வெளியுறவு மற்றும் தேசிய அவசர அமைச்சங்கள் வலியுறுத்தியுள்ளன.

கடந்த 14 நாட்களில் இந்தியா, நைஜீரியா மற்றும் தென்னாபிரிக்காவுக்கு விஜயம் செய்தவர்களுக்கு நுழைவுத் தடை ஜூன் 23 முதல் குறைவடையும் என்று துபாய் ஜூன் 19 அன்று கூறியிருந்தது.

அதற்கிணங்க கொரோனா வைரஸுக்கு எதிராக முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட இந்தியாவில் உள்ள ஐக்கிய அரபு எமிரேட் குடியிருப்பாளர்களுக்கும், தென்னாபிரிக்காவில் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட எவருக்கும், கடந்த 48 மணி நேரத்தில் கொரோனா வைரஸுக்கு எதிர்மறையை பரிசோதித்த நைஜீரியாவிற்கும் இந்த நுழைவு அனுமதிக்கப்படும்.

இந் நிலையிலேயே ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பொது சிவில் விமான போக்குவரத்து ஆணையம் மேற்கண்ட தடை உத்தரவினை அறிவித்துள்ளது.