கம்பளை, குறுந்துவத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தொலஸ்பாகை பகுதியில் வியாழக்கிழமை (1) காலை, சுமார் 200 அடி பள்ளத்தில் வீழ்ந்து பஸ்ஸொன்று விபத்துக்குள்ளானதில் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.

குறுந்துவத்த பகுதியிலுள்ள தேயிலை தொழிற்சாலைக்கு, தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற பஸ் ஒன்றே , தொலஸ்பாகை, பைரா கோழி பண்ணைக்கு அருகாமையில் உள்ள பள்ளத்தில் வீழ்ந்து இவ்வாறு விபத்துக்குள்ளானது.

விபத்து இடம்பெறும்போது சாரதி உட்பட நால்வர் பஸ்சுக்குள் இருந்துள்ள நிலையில், குறித்த நால்வரும் படுகாயமடைந்துள்ளனர்.

இந்நிலையில் அவர்களில், மூவர் நாவலப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவரும் நிலையில். மேலுமொருவர் மேலதிக சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.