சசி

மட்டக்களப்பு மாவட்ட செயலகமும் கலாசார அலுவல்கள் திணைக்களமும் இணைந்து நடாத்திய விஷேட தேவையுடையோருக்கான அரச கலை விழா 2016 இனை முன்னிட்டு நடாத்தப்பட்ட மாவட்ட மட்டத்திலான போட்டி தொடரில் வெற்றி பெற்றவர்களை பாராட்டும் நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது.

இதன் போது விஷேட தேவை உடையோர்களாலும் சமூகத்தில் சாதித்து காட் ட முடியும் என்ற வகையில் அவர்களுக்கான போட்டிகள் கலை கலாசாரம் போன்றவற்றில் பங்கு பற்றி வெற்றி பெற்றவர்களுக்கே இந்த பாராட்டு விழா இடம் பெற்றது.

இந்த நிகழ்வுக்கு உதவி அரசாங்க அதிபர் மற்றும் மாநகர ஆணையாளர் மற்றும் கண்டிக்கப் நிறுவன பணிப்பாளர்கள் ,மாற்று திறனாளிகள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.