கொழும்பு மாநகரசபை பெண் உறுப்பினர் மீது தாக்குதல் மேற்கொண்ட நபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் - மேயர் ராேசி

Published By: Digital Desk 3

01 Jul, 2021 | 04:27 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

கொழும்பு மாநகரசபை பெண் உறுப்பினர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை வன்மையாக கண்டிப்பதுடன் அவருக்கு ஏற்பட்டிருக்கும் அநீதி தொடர்பில்  நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமரிடமும் முறையிடுவேன் என கொழும்பு மாநகரசபை மேயர் ராேசி சேனாநாயக்க தெரிவித்தார்.

கொழும்பு மாநகரசபை மாதாந்த அமர்வு நேற்று புதன்கிழமை மேயர் ராேசி சேனாநாயக்க தலைமையில் இடம்பெற்றது. இதன்பாது நகரசபையின் பொதுஜன பெரமுன வெள்ளவத்தை தொகுதி பெண் உறுப்பினரான சுமித்ரலதா நபர் ஒருவரினால் தாக்கப்பட்டடிருப்பது தொடர்பில் தலையிட்டு, அவருக்கு நீதியை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கவண்டும்  என நகரசபையில் ஆளும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதற்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், 

ஒரு பெண்ணைத் தாக்குவது தண்டனைச் சட்டத்தின் கீழ் ஒரு குற்றமாகும். தாக்குதலுக்கு ஆளான பெண் உறுப்பினருக்கு ஏற்பட்டிருக்கும் அநீதி தொடர்பில் கவனம் செலுத்துவோம். அத்துடன் இதுதொடர்பாக ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் முறைப்பாடு செய்வேன்.  வழக்கு தொடர்பான சட்ட உதவிகளை பெறுக்கொடுக்கவும் நடவடிக்கை எடுப்பேன் என்றார்.

தாக்குதலுக்கு ஆளான பெண் உறுப்பினர் சுமித்ரலதா, தனக்கு இடம்பெற்ற அநீதி தொடர்பில் விபரிக்கையில்,

மாநகரசபையில் உறுப்பனர்களுக்கு ஒதுக்கப்படும் நிதியில் வெள்ளவத்தை கெனல் லேன் பகுதியில் அமைந்திருக்கும் சனசமூக நிலையம் மற்றும் கிராமசேவகர் அலுவலகம் என்பவற்றை பிரித்து வேலி அமைக்கும் நடவடிக்கையை கடந்த வாரம் மேற்கொண்டேன். நகரசபை ஊழியர்களே அந்த பணியை மேற்கொண்டுவந்தார்கள். இதன்போது அந்த இடத்துக்கு வந்த, திலிப் பெர்ணான்டோ என்பவர், நான்தான் இந்த தொகுதி உறுப்பினர். வேறு யாருக்கும் இங்கு இடமில்லை எனதெரிவித்து, என்னை தள்ளிவிட்டார். இதன்போது ஏற்பட்ட வாக்குவாதத்தால் அவர் என்மீது தாக்கினார். எனது கணவரும் பக்கத்தில்தான் இருந்தார். அவருடன் வந்த இன்னும் 3பேர் எனது கணவர்மீதும் தாக்கி தள்ளிவிட்டார்கள்.

இதன்போது எனது மகன் அந்த இடத்துக்கு வந்தபாேது எங்கள் மீது தாக்குதல் நடத்தியதனை கண்டு, எனது மகனும் திலிப் என்பவரை தாக்கினார். இதன்போது அவர் தொலைபேசி அழைப்பொன்றை மேற்கொண்டு அவரது உதவியாளர்கள் சிலரை அங்கு வரவழைத்துக்கொண்டு எம்மை தாக்க முற்பட்டனர். அந்த இடத்தில் நகரசபை ஊழியர்கள் மற்றும் சிலரும் இருந்தார்கள். அவர்களால் எதனையும் செய்ய முடியவில்லை. பொலிஸ் அதிகாரிகள் இருவரும் அங்கு வந்திருந்தார்கள். அவர்களும் எங்கள் மீது தாக்குதல் மேற்கொள்வதை தடுக்கவில்லை.

பின்னர் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்துக்கு சென்று முறையிட்டபாேது, அங்குவந்த திலிப் பெர்ணான்டோவும் இவர்கள் என்னை தாக்கினார்கள் என முறைப்பாடு செய்தார். இதன்போது பொலிஸ் பொறுப்பதிகாரி, இது இருதரப்புக்கிடையில் இடம்பெற்ற பிரச்சினை என தெரிவித்து, வழக்கு தொடுத்தார். பொலிஸாரும் பக்கச்சார்ப்பாகவே செயற்பட்டனர். எங்கள் மீது தாக்குதல் மேற்கொண்டதனை கண்ட பலரும் இருக்கையில், அவர்களை அழைத்து விசாரிக்கவில்லை. 

அத்துடன் திலிப் பெர்ணான்டோ என்ற இந்த நபர் இதற்கு முன்னரும் பல தடவைகள் என்னை எச்சரித்திருக்கின்றார். கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்டு தோற்றவர். இவர் எப்படி, தான் மாநகரசபை உறுப்பினர் என தெரிவிக்க முடியும்?. அத்துடன் இவர் தற்போது கொழும்பு மாநகரசபையில் எமது கட்சியைச்சேர்ந்த உறுப்பினர் ஒருவரின் செயலாளராக பணியாற்றி வருகின்றார்.

பொலிஸாரும் இவருக்கு சார்ப்பாகவே செயற்பட்டு வருகின்றனர். கொழும்பு மாநகரசபை உறுப்பினர் என பொய் கூறி மக்களை ஏமாற்றிவரும் இவருக்கு எதிராக பொலிஸார் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15