வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்ட இராணுவ அதிகாரி கைது!

Published By: Vishnu

01 Jul, 2021 | 12:15 PM
image

ஹபரன பகுதியில் அண்மையில் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுடன் வாய்த்தார்க்கத்தில் ஈடுபட்ட இராணுவ சேவையிலிருக்கும் சிரேஷ்ட அதிகாரியை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

அவர் இன்றைய தினம் ஹபரன பொலிஸ் நிலையத்தில் சாரணடைந்த நிலையிலேயே கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும், அவரை கேகிராவ நீதிவான் நீதிமன்றில் இன்றைய தினம் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இராணுவ சேவையிலிருக்கும் சிரேஷ்ட அதிகாரி ஒருவருக்கும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் சிலருக்கும் இடையில் கடந்த ஜூன் 25 ஆம் திகதி ஹபரனை பகுதியில் ஏற்பட்ட முறுகல் நிலைமை வலுவடைந்தது.

இதன் காரணமாக அது தொடர்பிலான உண்மையான விடயங்களை அறிவதற்கான விசாரணைகளை நடத்துவதற்காக, உரிய பொலிஸ் நிலையத்தில் இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு முறைபாடொன்று செய்யப்பட்டுள்ளமையாலும் அது தொடர்பிலான அடுத்தகட்ட நடவடிகைகளை முன்னெடுப்பதற்கு பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவினால் சிரேஸ்ட மேஜர் ஜெனரல்கள் இருவர் அடங்கிய விசாரணை குழுவொன்று முன்னர் நியமிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேசபந்து தென்னக்கோனுக்கு 3 வேளையும் வீட்டிலிருந்து...

2025-03-25 11:29:23
news-image

யாழில் சிறுமியை மின் கம்பத்தில் கட்டி...

2025-03-25 11:23:33
news-image

யோஷித ராஜபக்ஷவும் அவரது மனைவியும் பொலிஸ்...

2025-03-25 11:14:33
news-image

யாழில் ஏ.ரி.எம். அட்டையைத் திருடி மதுபானம்...

2025-03-25 11:12:02
news-image

வேட்புமனு தாக்கலின் பின் தேர்தல் விதிமுறை...

2025-03-25 11:05:49
news-image

பிரிவினைவாத புலம்பெயர்ந்தோர் முன்னர் எப்போதும் இல்லாத...

2025-03-25 11:06:05
news-image

மீட்டியாகொடையில் ரயிலில் மோதி ஒருவர் உயிரிழப்பு!

2025-03-25 10:48:17
news-image

நாட்டில் சில பகுதிகளில் எட்டரை மணிநேரம்...

2025-03-25 10:42:16
news-image

'மனித உரிமை மீறல் குற்றவாளிகளை சர்வதேசநீதிமன்றத்திற்கு...

2025-03-25 10:47:57
news-image

வேட்பு மனுக்கள் நிராகரிப்புக்கு எதிராக உயர்நீதிமன்றில்...

2025-03-25 10:23:00
news-image

சம்மாந்துறையில் மனித பாவனைக்குதவாத குளிர்பானம் கைப்பற்றல்...

2025-03-25 11:18:01
news-image

நாட்டின் பல பகுதிகளில் மிதமான நிலையில்...

2025-03-25 10:03:41